கச்சத்தீவை தாரைவார்த்த துரோகிகள், கச்சத்தீவை மீட்போம் என்று நாடகமாடுவது படு கேவலம் – நாராயணன் திருப்பதி காட்டம் !

கச்சத்தீவை தாரைவார்த்த துரோகிகள், கச்சத்தீவை மீட்போம் என்று நாடகமாடுவது படு கேவலம் – நாராயணன் திருப்பதி காட்டம் !

Share it if you like it

சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவை குறித்த உண்மையை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தினார். அதில் காங்கிரஸ் தான் கச்சதீவை இலங்கைக்கு கொடுத்ததாக மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தினத்தந்தி நாளிதழ் கச்சதீவை இலங்கைக்கு கொடுக்கப்பட்ட செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் மிக முக்கியமாக, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி நேற்று பிற்பகல் கையெழுத்திட்டார்.அதே நேரத்தில், இலங்கையிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது. ஒப்பந்தத்தில் இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் கையெழுத்திட்டார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்ததை ஆதரித்து இடது கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு கிளை தீர்மானம் நிறைவேற்றியது. “கச்சத்தீவு மிகச் சிறியது. மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை, குடிப்பதற்கு தண்ணீர்கூட கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட தீவை இலங்கைக்கு கொடுத்ததன் மூலம், இந்தியாவுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை” என்று தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

தி மு க, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் செய்த துரோக செயலை ‘தினத்தந்தி’ வெளியிட்டு, இந்த கூட்டணி தமிழர்களின் முதுகில் குத்தியதை ஆதாரத்தோடு விளக்கியுள்ளது.

மேலும், தேவையில்லாத விவகாரங்களுக்கெல்லாம் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் தி மு க, அப்போது சட்டசபையில் தீர்மானம் போடாதது ஏன்? அன்றைய தி மு க அரசு நீதிமன்றத்திற்கு செல்லாதது ஏன்? இந்த கேள்விகளை அன்றைய பாஜக தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் கேட்டிருப்பதை தெளிவாகியுள்ளது தினத்தந்தி. மேலும், கச்சத்தீவை மீட்க கோரி நீதிமன்றத்திற்கு சென்றது பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது தினத்தந்தி நாளிதழ்.

கச்சத்தீவை தாரைவார்த்து அதே துரோகிகள், அதே கச்சத்தீவை மீட்போம் என்று நாடகமாடுவது படு கேவலம்.

இது தான் திராவிட மாடல்!

https://dailythanthi.com/News/State/kachchathivu-issue-what-happened-1974-full-details-1101228…


Share it if you like it