துரைமுருகனை  தூர்வாறிய வேலுச்சாமி!

துரைமுருகனை தூர்வாறிய வேலுச்சாமி!

Share it if you like it

சட்டசபையில் காமராஜர் குறித்து தவறான தகவலை பதிவு செய்த அமைச்சர் துரைமுருகனை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி காட்டமாக விமர்சனம் செய்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆறு நகராட்சி தலைவர் பதவிகளை வழங்குவதாக தி.மு.க வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், அதிலும் சொன்ன இடங்களை வழங்காமல், வெறும் ஒரே இடத்தை மட்டுமே தி.மு.க வழங்கியது. இதனால், ஆளும் கட்சி மீது மிக கடுமையான விமர்சனங்களை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் முன்வைத்தனர்.

இதன் காரணமாக, அவ்வபொழுது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையே மறைமுகமாக பனிபோர் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. மேலும், அவ்விரு கட்சிகளின் உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே இருந்தது. அந்த வகையில், தமிழக சட்டமன்றத்தில் காமராஜர் வரலாறு குறித்து தவறான தகவலை நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் பதிவு செய்து உள்ளார். இதனை கண்டித்து, ஆதன் ஊடகத்திற்கு திருச்சி வேலுச்சாமி காட்டமாக பதில் அளித்த காணொளி தற்பொழுது, சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. இதே நிலை, தொடர்ந்தால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க உறவில் பெரும் விரிசல் அடைய வாய்ப்பு உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it