திரிசூல் – கருடா – 177 பெட்டிகளுடன் சரக்கு ரயில் – இந்திய ரயில்வேயின் புதிய அத்தியாயம்

திரிசூல் – கருடா – 177 பெட்டிகளுடன் சரக்கு ரயில் – இந்திய ரயில்வேயின் புதிய அத்தியாயம்

Share it if you like it

பாரதத்தில் தரைவழி சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனையாக 177 பெட்டிகளுடன் கூடிய நீளமான சரக்கு ரயில் ஒன்றை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. 177 பெட்டிகளுடன் கூடிய நீண்ட ரயிலான திரிசூல் மற்றும் கருடா ரயில் வெற்றிகரமாக இயங்க தொடங்கியது. இதன் மூலம் சரக்கு போக்குவரத்தில் மிகவும் நீளமான அதிவேக ரயில் போக்குவரத்தும் உள்நாட்டில் சாத்தியம் எனும் புதிய அத்தியாயத்தில் இந்திய ரயில்வே தடம் பதிக்கிறது.

பாரதத்தின் சரக்கு போக்குவரத்தை பொருத்தவரையில் தரைவழி சரக்கு போக்குவரத்து கையாளுகையே அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முழுவதுமாக கைவிடப்பட்டு சமீப காலமாகத்தான் வட இந்திய அளவில் சரக்கு போக்குவரத்திற்கு மீண்டும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து பங்களிப்பு வழங்க தொடங்கி இருக்கிறது. எல்லா வகையிலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்திற்கும் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த சரக்கு கையாள வைக்கும் தரைவழி போக்குவரத்தை பிரதான பங்கு வகிக்கிறது.

இதில் சாலை போக்குவரத்தில் கனரக வாகனங்களின் மூலம் சரக்குகள் இடமாற்றம் செய்யப்படும் போது அதிக அளவிலான பொருட் செலவில் கூடுதல் கால நேரம் தேவைப்படுகிறது. மேலும் எரிபொருள் விலை ஏற்றம் தொலைதூரப் பயணம் அதன் காரணமான செலவுகள் இடர்பாடுகள் காரணமாக இந்த சரக்கு போக்குவரத்து பெரும் சிக்கலும் சவாலும் நிறைந்ததாகவே இருக்கிறது. அதனால் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் ரயில்வே மூலமான சரக்கு போக்குவரத்திற்கு அதிகமான தேவையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் அந்த தேவைக்கான பங்களிப்பு இதுவரையில் இந்திய ரயில்வேயின் மூலம் கிடைக்கப்பெறவில்லை

சமீப காலமாக ரயில்வே துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு அதன் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் தொடங்கி நவீன தொழில்நுட்பங்கள் முழுமையான மறு கட்டமைப்புகள் என்று இந்திய ரயில்வே புத்துயிர் பெற்று வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அதிக அளவில் ரயில்வே துறை நவீனமயமாக்கப் படுகிறது . குறிப்பாக புதிதாக ரயில் முனைமங்கள் ஏற்படுத்துவது. ஏற்கனவே இருக்கும் ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுவது .ரயில் பெட்டிகள் அதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் ரயில் போக்குவரத்து இருப்புப் பாதை என்று அனைத்திலும் நவீன தொழில்நுட்பங்களும் பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்படுவது. உலகத் தரம் வாய்ந்த ரயில் சேவையை உள்நாட்டில் கொண்டு வருவது என்ற இலக்கை நோக்கி இந்திய ரயில்வே வேகமாக பயணிக்கிறது.

ரயில் போக்குவரத்தை பொருத்தவரையில் தரைவழிப் போக்குவரத்தை குறைந்த செலவில் தொலைதூரப் பயணத்திற்கு மிகவும் இலகுவானதாகவும் ஏற்றதாகவும் பார்க்கப்படுகிறது. இது சரக்கு போக்குவரத்து பயணிகள் போக்குவரத்து இரண்டிலும் பிரதானமாக பங்களிப்பையும் வழங்கி வருகிறது. ஆனால் இங்குள்ள இருப்புப் பாதைகள் தொடங்கி ரயில் பெட்டிகள் வரை அனைத்து பிரிட்டிஷார் காலத்தில் கட்டமைக்கப்பட்டவை. அதன் தொடர்ச்சியான தொழில்நுட்பங்கள் மட்டுமே இருந்தது. இதன் காரணமாக பெருகிவரும் மக்கள் தொகை கால சூழல் இவற்றிற்கு ஏற்ற பங்களிப்பை இந்திய ரயில்வே வழங்க முடியாமல் பின் தங்கியது. இதனால் ரயில்வே துறை மக்களுக்கு முழுமையான சேவையை வழங்க முடியாத நிலை.

ஆனால் உள்நாட்டில் போக்குவரத்திலேயே தொலைதூரப் போக்குவரத்திற்கு வந்தே பாரத் என்ற பெயரில் அதிநவீன ரயில் சேவை வந்தது. உள்ளூரில் பொதுப் போக்குவரத்தை உபயோகப்படுத்தும் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டங்கள் என்று மக்கள் போக்குவரத்திற்கு முழுமையான பங்களிப்பை நவீனமாக வழங்க இந்திய ரயில்வே தயாராகிக் கொண்டிருக்கிறது. இது மகாகளிடையே பெறும் வரவேற்பு பெற்றுள்ளது. இது சரக்கு போக்குவரத்திலும் கிடைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தது. சரக்கு போக்குவரத்து வழக்கம் போல பின் தங்குவதில் இருந்த சுணக்கத்தை நீக்கி அதிலும் புதிய தொழில்நுட்பங்கள் கட்டமைப்புகளை புகுத்தி வெற்றிகரமாக அதிவேக சரக்கு ரயில் போக்குவரத்திற்கும் இந்திய ரயில்வே தயாராவது பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

சரக்கு ரயில் போக்குவரத்தை பொருத்த முறையில் தற்போது சிக்கலும் இடர்பாடும் மிகுந்த பாதுகாப்பற்ற சரக்கு போக்குவரத்தை பெரும் சவாலாக இருக்கிறது சரக்கு போக்குவரத்தில் தொலைதூரப் போக்குவரத்து மிகக் குறைந்த போக்குவரத்து காரணமாக இந்த சரக்கு போக்குவரத்தில் திருட்டு கொள்ளை உள்ளிட்ட இழப்புக்கள் அதிகரிக்கிறது. மேலும் பல்வேறு சீதோஷ்ண நிலைகள் கொண்ட உள்நாட்டு பகுதிகளில் போக்குவரத்தில் இயல்பாகவே பொருட்களில் இழப்பு தேக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே சரக்கு போக்குவரத்தில் குறிப்பிட்ட முனைமங்களுக்கு இடையே மட்டும் சரக்கு போக்குவரத்தை கையாள்வது அதன் காரணமாக குறைந்த அளவு ரயில் பெட்டிகள் உபயோகம் வைத்து சரக்கு போக்குவரத்து கையாள்வதே பாதுகாப்பாக கருதப்படுகிறது. இதனால் தொலைதூர சரக்கு போக்குவரத்தும் அதன் பயன்பாடுகளும் அரிதாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்காக கூடுதல் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது.

சரக்கு போக்குவரத்தில் இடையூறுகளாக இருக்கும் இந்த குளறுபடிகளை எல்லாம் சரி செய்து சரக்கு கையாளுகையில் அதிக அளவு சரக்கை ஒரே நேரத்தில் இடப்பெயர்ச்சி செய்வது. அதை பாதுகாப்பாகவும் விரைவாகவும் இடப்பெயர்ச்சி செய்வது அதற்கு தேவையான அதிவேக சரக்கு ரயில் போக்குவரத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைப்பது ஒன்றே தீர்வு என்ற முனைப்போடு முதல் முதலாக 177 பெட்டிகளைக் கொண்ட அதிவேக சரக்கு ரயில் போக்குவரத்து சோதனை வெற்றிகரமாகி இயங்கத் தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படக்கூடும்.

சில தினங்களிலேயே கெட்டுப் போகும் பொருட்கள் அல்லது அதி விரைவாக போய் சேர வேண்டிய பொருட்களுக்குதற்போது விமான போக்குவரத்தையும் குறைந்த தொலைவில் என்றால் சாலை போக்குவரத்து மட்டுமே முதலிடம் வகிக்கிறது. இதன் மூலம் ஏற்படும் செலவுகள் அதன் மூலமாக விலைவாசி என்று இது சாமானிய மக்களுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. ஆனால் சாலை வழிலான ரயில் போக்குவரத்திலேயே நவீன தொழில்நுட்பங்களுடன் அதிவேக சரக்கு போக்குவரத்து பயன்பாட்டிற்கு வருமானால் பொருட்களின் பதுக்கல் தேக்கம் பொருட்கள் பாழாகும் இழப்புக்கள் எல்லாம் முடிவுக்கு வரும். இதனால் தேவையற்ற இழப்புக்கள் விலை ஏற்றமும் தவிர்க்க படும்.

அத்தியாவசிய பொருட்களில் திடீர் விலை ஏற்றமும் தட்டுப்பாடு பதுக்கல் உள்ளிட்டவை முடிவுக்கு கொண்டு வரப்படும். ஒரு பகுதியில் ஏற்படும் தட்டுப்பாட்டை இந்த விரைவு போக்குவரத்தின் மூலம் சரி செய்யும்போது மற்றொரு பகுதியில் ஏற்பட இருக்கும் விலை வீழ்ச்சியும் தானாக கட்டுக்குள் வரும். இதனால் உற்பத்தியாளர்கள் குறிப்பாக விவசாயிகள் விவசாய பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் இழப்பிலிருந்து மீட்க முடியும். பொருட்களின் உபயோகமும் பாதுகாப்பான கையாளுகையும் சாமானிய மக்களுக்கும் பரவலாக்கப்படும். அவ்வகையில் பொதுமக்களின் ரயில் பயணத்திற்கு வந்தே பாரத் ரயில் எப்படி வரப் பிரசாதமாக அமைந்ததோ? அதே வகையில் சரக்கு போக்குவரத்து திருச்சூர் கருடா உள்ளிட்ட ரயில் போக்குவரத்து பொருளாதார ரீதியாக உற்பத்தி வியாபாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பெரும் வரமாக அமையும்.


Share it if you like it