தமிழகத்தில் இருக்கும் திமுகவின் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பேச்சால் எனது சொந்த மாநிலத்தில் சொந்த தொகுதியில் கூட சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று உத்தரபிரதேசம் மாநிலத்தின் தலைவர் அகிலேஷ் யாதவ் வேதனையோடு பதிவு செய்திருக்கிறார். அவர் வாழும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆளுங்கட்சியாக இருக்கிறது .அதனால் அங்கு உதயநிதியின் சனாதன விரோத பேச்சிற்கு அவர் சார்ந்திருக்கும் எதிராக குரல் எழும்பக்கூடும் என்று நினைத்தால் அது தவறான புரிதல்.
இந்து அடையாளம் வேறு .இந்துத்துவ அரசியல் வேறு என்ற பூச்சாண்டி எல்லாம் தமிழகத்தில் மட்டுமே எடுபடும் . தமிழகத்தின் எல்லைக்கு அப்பால் நாடு முழுவதிலும் சரி. தேசத்திற்கு அப்பால் உலகம் முழுவதிலும் இருக்கும் இந்து மக்களிடமும் சரி. ஒரே ஒரு நிலைப்பாடு தான். அது அவர்களின் ஆழ்ந்த சனாதன பற்றுதல் .ஆன்மீக நம்பிக்கைகள் அவர்களின் மத அடிப்படையிலான வழிபாட்டு முறைகள் பூஜைகள் பண்டிகைகள் உற்சவங்கள் கொண்டாட்டங்கள் பாரம்பரிய திருவிழாக்கள் எல்லாம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அதுவே அவர்களின் சனாதன தர்மத்தின் அடையாளம் .அவர்கள் முன்னோர் வழியில் பாரம்பரியமாக அவர்கள் வாழ்ந்து வருவதன் சாட்சியம். அவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளையோ அதன் வழியிலான வாழ்வியல் முறைகளையும் எப்போதும் எங்கேயும் விட்டுக் கொடுப்பதில்லை. அதில் அவர்களுக்கு கட்சி அரசியல் கலப்பு எல்லாம் கிடையாது. அனைத்திற்கும் அப்பாற்பட்டு தனது தாய் பூமி தாய் தர்மம் என்ற ஒற்றை புள்ளியில் ஒருமித்த இந்துக்களாக ஒன்றிணைவார்கள்.
அந்த புரிதல் தான் வட இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளை சிறுபான்மை வாக்கு வாங்கி பாசத்தையும் கடந்து பெரும்பான்மை மக்களை ஒரு அச்சத்தோடு அணுக வைத்திருக்கிறது. காரணம் கடந்த காலத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்டவர்களின் சிறுபான்மை ஆதரவு வாக்கு வங்கி அரசியலும் பாகிஸ்தான் பாசமும் பல்வேறு உள்நாட்டு குழப்பங்களுக்கு வழிவகுத்தது. பெரும்பான்மை மக்களுக்கு விரோதமான அரசியலை முன்னெடுக்க வைத்தது. இதன் காரணமாக வெகுண்டு எழுந்த வட இந்திய மக்கள் ஒருமித்த ஆதரவில் காங்கிரசை தூக்கி எறிந்து பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தி விட்டார்கள் .இன்று வரை தொடர்ச்சியாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார்கள். அது கொடுத்த அச்சம்தான் காங்கிரஸின் இளவரசர் ராகுல் காந்தியும் இளவரசி பிரியங்காவும் கழுத்தில் காவிநிற பூ மாலை அணிந்து நெற்றியில் நீண்ட திலகம் விட்டு கோவில்களில் வலம் வருவதும் அவ்வப்போது பூணூல் அணிந்து நானும் கவுல் பிராமணன் தான் என்று ராகுல் பேசுவதன் பின்னணி.
இந்த அச்சத்தின் வெளிப்பாடு தான் உதயநிதியின் சனாதன விரோத பேச்சையும் சாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று அதை முழுமையாக ஆதரித்ததையும் பாஜகவும் இந்து அமைப்புகளும் பெரும் முனைப்புடன் நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்தது .அதன் எதிரொலி தான் நாடு முழுவதும் அவருக்கு எதிரான கண்டனங்களும் விமர்சனங்களும் வலுத்தது .ஆங்காங்கே வழக்குகளும் பதிவானது .உச்ச நீதிமன்றம் தொடங்கி காஷ்மீரின் கிழமை நீதிமன்றம் வரை உதயநிதிக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறது.
உள்துறை அமைச்சரும் மோடியும் உதயநிதியின் பேச்சை எப்போது கையில் எடுத்தார்களோ? அப்போதே ஐஎன்டிஐஏ கூட்டணி அலறத் தொடங்கிவிட்டது. காரணம் ஒரு தேசத்தின் உள்துறை அமைச்சரும் பிரதமரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசினால் அதன் தாக்கம் தேசத்தின் எல்லையை கடந்து சர்வதேச அரங்கிலும் எதிரொலிக்கும் என்பது அவர்களின் புரிதல். திமுகவின் இந்த பொறுப்பற்ற இந்து விரோத அரசியலும் உதயநிதியின் சனாதன ஒழிப்பு மாநாட்டு பேச்சும் பெரும் பிரயத்தனம் செய்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தங்களின் ஐஎன்டிஐஏ கூட்டணியை எங்கே சிதைத்துப் போட்டு விடுமோ ? என்று அஞ்சினார்கள். அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு உதயநிதிக்கு கண்டனங்களை பதிவு செய்தார்கள்.
ஆனால் யாரும் திமுகவை ஐஎன்டிஐஏ கூட்டணியில் இருந்து வெளியேற்றவும் அல்லது தான் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்றோ பேசவில்லை. இந்த இரட்டை வேடத்தின் பின்னணியை சரியாக புரிந்து கொண்ட பிரதமர் சனாதனத்திற்கு எதிராக ஐஎன்டிஐஏ கூட்டணி சார்ந்தவர்கள் களம் இறங்குகிறார்கள். அவர்கள் சனாதனிகள் மீதான தாக்குதலை தொடங்கி விட்டார்கள். அவர்களிடமிருந்து சனாதனிகள் பாதுகாப்பாகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்து விட்டார் . அதன் எதிரொலி நாடு முழுவதும் திமுக அதன் ஆதரவு கட்சிகள் நோக்கி இந்து மக்கள் கடந்து மத நல்லிணக்கம் வேண்டும் மாற்று மத மக்கள் அமைப்புகள் கூட வெகுண்டு எழ தொடங்கிவிட்டது.
இதோ திமுகவின் நெருங்கிய தோழமைக் கட்சி கருணாநிதியின் நெருக்கமான அரசியல் சகா என்று அடையாளம் காணப்பட்ட முலாயம் சிங் யாதவ் மகன் உத்திரபிரதேசத்தில் இருந்து உதயநிதியின் பொறுப்பற்ற பேச்சால் என்னால் சொந்த தொகுதியில் நடமாட முடியவில்லை என்று வெளிப்படையாக உண்மை நிலையை அம்பலப்படுத்தி இருக்கிறார் . ஆனால் இதே தமிழகத்தில் இருக்கும் இந்துக்கள் பெருவாரியாக வாக்களித்து தான் அந்த திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தி இருக்கிறார்கள் என்பது தமிழகத்தின் துரதிருஷ்டம்.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. இங்கும் இருப்பவர்களின் 90 சதம் இந்துக்கள் தான் என்று தேர்தல் நேரத்தில் பேசுவதும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு இது பெரியாருக்கு கிடைத்த வெற்றி என்று பேசுவதும் திமுகவின் வழக்கம். ராமஜென்ம பூமி விவகாரம் முதல் சேது சமுத்திர திட்டம் வரை அனைத்து விஷயங்களிலும் திமுக இந்துக்களுக்கும் இந்து சனாதன தர்மத்திற்கும் எதிராகத்தான் ஒவ்வொரு நகர்வையும் எடுத்தது . ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டம் ஆக்கி இருக்கிறது. தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை உதவியோடும் ஒத்துழைப்போடும் இந்து ஆலயங்களில் நிகழும் அத்துமீறலும் அராஜகமும் கொஞ்ச நஞ்சம் அல்ல .ஆனால் இவை அனைத்தையும் கடந்து இங்கு மங்கல அடையாளங்களோடு ஆலய வழிபாடு ஆன்மீக வாழ்க்கையில் இருக்கும் பெரும்பான்மை மக்கள்தான் இதே திமுகவிற்கு பெருவாரியாக வாக்களித்து அவர்களை ஆட்சி கட்டிலில் அமர்த்துகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு. ?
அவர்களைப் பொறுத்தவரையில் ஆன்மீகம் வேறு அரசியல் வேறு என்று வியாக்கியானம் பேசுவார்கள். ஆலயம் எல்லாம் நம்முடையது. அதனால் அதன் சொத்துக்கள் நிர்வாகம் எல்லாம் நமக்குத்தானே? சொந்தம் என்று யோசிப்பவர்கள். ஒருநாளும் இந்த ஆலயங்கள் அதன் ஆகமங்கள் வழியில் முன்னோர்கள் கட்டமைத்த அதன் பாரம்பரியத்தில் இருப்பது தானே நமக்கு பெருமை ? அதை அதன் இயல்பிலேயே நிர்வகிப்பது தானே நமது கடமை என்ற அடிப்படை புரிதல் இல்லாதவர்கள்.
இன்று தேர்தல் வெற்றிக்காகவும் இந்துக்களின் வாக்குகளுக்காகவும் இந்து அடையாளத்தோடு எல்லா கட்சிகளும் வலம் வருவது இந்து ஆலயங்களை முன்வைத்து தான். இந்த ஆலயங்களும் அதன் பொக்கிஷங்களும் பாதுகாப்பாக இருந்தால் தானே அது நமது அடுத்த தலைமுறைக்கு போய் சேரும். அதையெல்லாம் பாதுகாக்க வல்ல ஒரு அரசை நாம்தானே தேர்ந்தெடுக்க வேண்டும் ? என்ற புரிதல் இங்குள்ள இந்துக்களுக்கு இன்று வரை இல்லை. தேர்தல் வருமானால் இலவசம் பரிசு வாக்களிக்க பணம் என்று சில நூறு ரூபாய்களுக்கு அவர்களின் வாக்குரிமைகள் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. அவர்களும் அதை விற்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.
எந்தக் கட்சியில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று திமுகவின் தலைவர்களே தேர்தல் நேரத்தில் பேசுகிறார்களோ ? அதே திமுகவில் இருக்கும் இந்துக்கள் ஒருநாளும் அவர்களின் தலைவர்களின் சனாதன விரோத பேச்சையோ நடவடிக்கையோ ஹிந்து மத அவமதிப்பையும் கேள்வி கேட்டதில்லை. குறைந்தபட்சம் அவர்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து கட்சிக்கு எதிராக குரல் எழுப்புவது கட்சியை விட்டு வெளியேறுவது கிடையாது . மாறாக அவற்றையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கும் ஆன்மீகவாதிகளையும் இதர இந்து அமைப்புகள் சார்ந்தவர்களையும் மத பயங்கரவாதிகளாக பாசிசவாதிகளாக அடையாளப்படுத்துவதையே தொழிலாக கொண்டிருக்கிறார்கள்.
வட இந்தியாவில் உள்ள மக்களுக்கு இருக்கும் புரிதல் இல்லை. தங்களின் இளவரசருக்கும் திமுக கட்சிக்கும் எதிராக அவர்களின் எதிர்ப்பு வலுப்பதை பற்றிய புரிதல் கூட இங்குள்ள திமுக இந்துக்களுக்கு இல்லை. அந்த புரிதல் இருந்திருந்தால் அவர்கள் சார்ந்த கட்சியின் தலைவர்கள் அவர்களின் தன் எதிரே மேடையில் இந்து விரோதம் பேச தேவையும் இருந்திருக்காது. துணிச்சலும் வந்திருக்காது. ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தங்களின் தேசம் தர்மம் என்ற நிலையில் இருக்கும் வட இந்தியர்களை பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமல் மங்கல அடையாளங்களோடு இந்துக்களாக வாழ்ந்து கொண்டே உணர்வின்றி திமுகவின் ஆட்சி அதிகாரத்திற்கும் அரசியல் வெற்றிக்கும் முழுமையான பங்களிப்பையும் வழங்குகிறார்கள். ஆன்மீக உணர்வோடு தர்மத்தின் வழியில் ஒன்றுபடும் வட இந்தியர்களை பார்த்து பானி பூரி வாலா என்று ஏளனம் பேசி மகிழ்வார்கள். தங்களுக்கும் சேர்த்துத்தான் அந்த வட இந்தியன் போராடுகிறான் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் திமுகவின் அடுத்த தலைமுறை வாரிசிற்கு மூன்றாம் கலைஞர் நான்காம் கலைஞர் என்று பட்ட பெயரோடு கோஷம் எழுப்ப தயாராகி வருகிறார்கள்.