ட்விட்டரை தெறிக்கவிடும் ஹேஷ்டேக்!

ட்விட்டரை தெறிக்கவிடும் ஹேஷ்டேக்!

Share it if you like it

தமிழகத்தில் ஹிந்தி தெரியாது போடா என்கிற ஹேஷ்டேக்குக்கு போட்டியாக ஹிந்தி படிப்பேன் போடா என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களால் ஹிந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி ஹிந்திக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தினார். தற்போதும் திராவிட இயக்கங்கள் ஹிந்தி எதிர்ப்பை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. காரணம், ஹிந்தி படித்தால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று மக்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். அதாவது, தாங்கள் அரசியல் செய்வதற்காக ஹிந்தி எதிர்ப்பு என்ற நாடகத்தை நடத்தி மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள். இதன் மூலம் தங்களது ஓட்டு வங்கியையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், தற்போது தமிழக மக்களிடம் நிறையவே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழியைக் கற்றுக் கொண்டால் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்ய முடியும் என்கிற புரிதல் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தவிர, ஒரு மொழியை கூடுதலாக கற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும், ஹிந்தியை கற்றுக் கொள்வதால் தமிழ் மொழி அழிந்து விடாது என்றும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, ஆர்வத்துடன் ஹிந்தியை படித்து வருகிறார்கள். ஆனால், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஹிந்தி எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரதத்தில் ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தியை படிக்கலாம் என்று கூறினார். இதை உ.பி.ஸ்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே, ஹிந்தி தெரியாது போடா என்று ஹேஷ்டேக் போட்டு ட்விட்டரில் வைரலாக்கினர். பதிலுக்கு ஹிந்தி ஆதரவாளர்கள் ஹிந்தி படிப்பேன் போடா என்று ஹேஷ்டேக் போட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும், ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது, தி.மு.க.தான் அழியும் என்றும் பனியனில் அச்சடித்து அணிந்து வருகின்றனர். இன்னும் சிலரோ, எங்களுக்கு ஹிந்தி வேணாம், வேலை வேணாம், டாஸ்மாக் மட்டும் போதும் போடா என்று உ.பி.ஸ்களை கிண்டலடித்து வருகின்றனர்.


Share it if you like it