பள்ளி சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகி வருகிறதா?
தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு பள்ளி செல்லும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்தான செய்திகள் தொடர்கதையாக இன்று வரை இருந்து வருகிறது. கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடங்குவதற்குள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம். அதனை தொடர்ந்து கோவையில் காணாமல் போன சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு என பள்ளி சிறுமிகளுக்கும், பெண்களுக்கும், பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறதோ? என்று பொதுமக்களே பேசும் அவலநிலை தற்பொழுது தமிழகத்தில் எழுந்து உள்ளது.
பா.ஜ.க ஆளும் மாநிலம், மத்திய அரசு, மோடி அரசு, என்றால் உடனே அலறி அடித்துக் கொண்டு கருத்து கூறும் நெறியாளர் செந்தில், சன் நியூஸ் குணசேகரன், புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மற்றும் கார்த்திக்கை செல்வன், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் சுந்தரவள்ளி, காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி, தோழர் அருணன், ஊடக நெறியாளர்கள், சில்லறை போராளிகள், இதுவரை இரு சிறுமிகளின் உயிர் இழப்பு குறித்து தனது கருத்தினையோ அல்லது ஊடக விவாதமாகவோ நடத்த முன்வரவில்லை என்பது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் பணம்