நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராஜேஷ் தாஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் டி.ஜி.பி.யாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் டி.ஜி.பி. குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. இதனிடையே, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாங்கள் பார்க்காத காவல்துறையா? ராஜேஷ் தாஸ் பேர் எல்லாம் நியாபகம் இருக்கு. எங்கள் ஆட்சிக்கு இன்னும் 5 மாதம் தான் உள்ளது என கூறியிருந்தார். ஜல்சா டி.ஜி.பி.க்கு சிறை தண்டனை கிடைத்திருப்பதில் உதயிநிதியின் பங்கு இருக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.