தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உடனே சென்று உங்கள் நகைகளை அடகு வையுங்கள் என்று தேர்தல் சமயத்தில் ஏழை, எளிய மக்களிடம் ஆசைவார்த்தை கூறி உசுப்பி விட்டார் உதயநிதி ஸ்டாலின். ஆனால், தற்போது வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாத நிலையில், உதயநிதி எங்கே ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் பொதுமக்கள்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு விடியல் கிடைக்கும்’ என்பன உட்பட பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளித் தெளித்தனர் தி.மு.க.வினர். ஆனால், ஆட்சியில் அமர்ந்து 8 மாதங்களை கடந்த பின்னரும்கூட, தாங்கள் இருளில் தத்தளித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தும் அவலநிலை இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடும் என்பதுபோல் அப்பாவி ஏழை மக்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி, சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கத் தூண்டியவர் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
ஆனால், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியோ, கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 42 லட்சம் பேர் நகைக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இப்படி ஏராளமானோர் முறைகேடாக நகைக்கடன் வாங்கி இருப்பதால், அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். ஆகவே, தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைகடன் தள்ளுபடி உண்டு என்று தெரிவித்திருந்தார். ஆகவே, நகைக்கடன் தள்ளுபடி உறுதியாக உண்டு என்று ஏழை, எளிய மக்களை உசுப்பி விட்ட உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் தேடி வருகின்றனர். மேலும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நம்பி மோசம்போன பாட்டி ஒருவர், விடியல் அரசுக்கு எதிராக தனது கோவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் லிங் இதோ…