ஓ… இதுதான் நீட் தேர்வு ரத்து ரகசியமா? உதயநிதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஓ… இதுதான் நீட் தேர்வு ரத்து ரகசியமா? உதயநிதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டும்தான் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும்வரை ஓயமாட்டோம் என்று கரூரில் தெரிவித்திருக்கிறார். இதனால், ஓ… இதுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியமா? என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி? என்கிற ரகசியம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறியவர் உதயநிதி ஸ்டாலின். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று முந்தைய அ.தி.மு.க. அரசையும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தவர். ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்துவிட்டனர். ஆகவே, மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைப்பது, தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்புவது, அனைத்துக் கட்சிக் கூட்டம் போடுவது என தங்கள் தோல்வியை மறைக்க தொடர்ந்து ஏதேனும் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கரூர் சென்ற உதயநிதி, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார். இதுதான் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி அவரை துரத்தி அடித்து வருகின்றனர். அதேசமயம், ஓ… நீட் தேர்வை ரத்து செய்யும்வரை ஓயமாட்டோம் என்று கூறுவதுதான் நீட் ரத்து ரகசியமா? என்று நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

.

Image
Image
Image
Image


Share it if you like it