சீனா வேணும்… ரஷ்யா வேணாம்: காம்ரேடுகளின் கள்ளத்தனம்!

சீனா வேணும்… ரஷ்யா வேணாம்: காம்ரேடுகளின் கள்ளத்தனம்!

Share it if you like it

உணவில் கூட ரஷ்யாவை நீக்கி தாங்கள் சீன ஆதரவாளர்கள் என்பதை கேரள மக்கள் உணர்த்துவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பி இருக்கிறது.

கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரை, சீன ஆதரவாளர்கள் என்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. உதாரணமாக, சீனாவுக்கும், இந்தியாவுக்கும் போர் மூண்டபோது, இங்கிருக்கும் காம்ரேடுகள் சீனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் என்பதை வரலாறு சொல்லும். தற்போதும்கூட, இந்தியா தன்னிறைவு அடைந்து விடக் கூடாது, வல்லரசாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, சீனாவின் கைக்கூலிகளாக மாறி பல்வேறு திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் உணவில்கூட சீன மெனுவை வைத்துக் கொண்டு, ரஷ்ய உணவை நீக்கி தங்களது விசுவாசத்தைக் காட்டி இருக்கிறார்கள். அதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியா இரு நாடுகளையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. எனினும், இந்தியாவில் இருக்கும் சிலர் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் இந்த கோஷம் சற்று அதிகமாகவே இருக்கிறது.

அந்த வகையில், ரஷ்யாவுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில், ஒரு உணவு விடுதியில் ரஷியன் சாலட் என்கிற உணவை தங்களது மெனு பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதாக அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறது. அதேசமயம், நமது எதிரி நாடானா சீனாவின் சைனீஸ் உணவுவகைகளை தங்களது மெனு பட்டியலில் இருந்து நீக்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், 1971-ம் ஆண்டு அண்டை நாடான பாகிஸ்தான், நமது நாட்டின் மீது படையெடுத்தது. அப்போது, இதே உக்ரைன் நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது. அதேசமயம், ரஷ்யாதான் நமது நாட்டுக்கு ஆதரவாக களமிறங்கியது.

இதை மனதில் கொண்டுதான், ரஷ்யாவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், இந்தியா நடந்துகொள்கிறது. அதற்காக, போரை ஆதரிக்கவில்லை. இரு நாடுகளையும் சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் பாரத பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். நிலைமை இப்படி இருக்க, பாரத மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய காம்ரேடுகள், உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுவது என்ன மனநிலை என்பதுதான் சமூக ஆர்வலர்களின் விமர்சனமாக இருக்கிறது. இதை பலரும் சமூக வலைத்தளங்களில் பதவிட்டு தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Share it if you like it