ஆப்கானில் பெண்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியுள்ளது.
1996 முதல் 2001-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தவர்கள் தாலிபான்கள். பாகிஸ்தான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள், அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றுபவர்கள். எனவே, அந்நாட்டில் வசிக்கும் பெண்கள் கல்வி கற்கக் கூடாது. தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் வகையிலான புர்காவை அணிய வேண்டும். பெண்கள் பொதுவெளியில் நடமாடக் கூடாது. வேலைக்குச் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இதை மீறும் பெண்களுக்கு கசையடி கொடுப்பது. பொதுவெளியில் மரண தண்டனை விதிப்பது என அட்டூழியம் செய்து வந்தனர்.
இந்நிலையில், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா. இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது ; பெண்கள் முன்னேற்றத்திற்கு தாலிபான்கள் தடையாக இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் இருந்து பெண்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். அவர்களை, வீட்டிற்குள் முடக்கும் நோக்கத்துடன் தாலிபான்கள் சட்டம் இயற்றியுள்ளனர்.
பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஆப்கான் நாடு முதன்மையான இடத்தில் இருப்பதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.