அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நிதின் கட்கரி தொடர்பாக கார்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தம்மை குறித்து அவதூறு பரப்பும் விதமாக உள்ளது. வீடியோவில் கிராமங்கள், விவசாயிகள், பாதிப்பு, மருத்துவமனை, சாலை வசதிகள் இல்லை என்றும் தவறான தகவல்கள் பரப்பி உள்ளார். மேலும் பா.ஜ., கட்சியில் குழப்பம், ஏற்படுத்தும் நோக்கமாக இருப்பதாகவும் கட்கரி அனுப்பி உள்ள நோட்டீசில் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்காவிட்டால் மான நஷ்ட வழக்கு பதியப்படும் என்றும் கூறியுள்ளார்.