இனி எந்த ரவுடியும் தொழிலதிபர்களை மிரட்டமுடியாது’’ என ‘‘உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ மற்றும் ஹர் தோய் மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் யோகி இவ்வாறு பேசினார் : உத்தர பிரதேசத்தில் தற்போது எந்த ரவுடியும் அல்லது மாபியா கும்பலும் தொழிலதிபர்களை போனில் மிரட்ட முடியாது. ஒரு காலத்தில் உத்தர பிரதேசம் வன்முறைக்கு பெயர் போன இடமாக இருந்தது. சில மாவட்டங்களின் பெயரை கேட்டாலே மக்கள் அச்சம் அடைந்தனர். தற்போது அதுபோல் பயப்படத் தேவை இல்லை.
2012-2017-ம் ஆண்டுகளுக்கு இடையே உத்தர பிரதேத்தில் 700 வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஆனால் 2017-2023-ம் ஆண்டுவரை எந்த ஊரடங்கும் பிறப்பிக்கப்படவில்லை. அதற்கான சூழலுமு உருவாகவில்லை. எனவே, உ.பி.யில் தொழிற்சாலைகள் தொடங்கி முதலீடு செய்வதற்கு இது மிகச் சிறந்த மாநிலம். வலுவான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாட்டுக்கு உத்தரபிரதேசம் உத்திரவாதம் அளிக்கிறது என அவர் கூறினார்.
இதனிடையே, உ.பி முன்னாள் எம்.எல்.ஏ. அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் 61 மாபியாக்களின் பட்டியலை உ.பி. காவல்துறையினர் தயார் செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த, அறிவிப்பை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ரவுடி கும்பல்கள் பெரும் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.