யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம்: பொய்ச் செய்தி பரப்பும் உ.பிஸ்… உண்மையை உடைத்த நெட்டிசன்கள்!

யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம்: பொய்ச் செய்தி பரப்பும் உ.பிஸ்… உண்மையை உடைத்த நெட்டிசன்கள்!

Share it if you like it

யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் என்று உ.பிஸ் பொய்ச் செய்தி பரப்பி வரும் நிலையில், அவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில், வீடியோவை வெளியிட்டு அசத்தி இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

ப்ரீபெய்ட் பேமென்ட் கருவிகளை (பி.பி.ஐ.) கிஃப்ட் கார்டுகள், வாலட்கள் மற்றும் பிறவற்றுடன் யு.பி.ஐ. மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 1.1 சதவிகிதம் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என்று என்.பி.சி.ஐ. தெரிவித்திருந்தது. அதாவது 2,000 ரூபாய்க்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு இந்த கட்டணம் பொருந்தும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இந்தக் கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே பொறுந்தும் என்றும் அறிவித்திருந்தது.

ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ், தி.மு.க. உ.பிஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் இந்த உண்மையை மறைத்து விட்டு, ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். இதனால், வாடிக்கையாளர்கள் மத்திய அரசு மீது கடும் அதிர்ச்சியடைந்தனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட உ.பிஸ், மத்திய அரசை வசைபாடி வந்தனர். இந்த விவரம் என்.பி.சி.ஐ.க்குத் தெரியவந்தது.

இதையடுத்து, இதுகுறித்து என்.பி.சி.ஐ. விளக்கம் அளித்திருக்கிறது. அதில், கூகுல் பே, பே டிஎம், போன் பே போன்ற யு.பி.ஐ. ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அதேசமயம், ப்ரீபெய்டு கட்டணக் கருவிகள் (PPI) பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டண நடைமுறை பொருந்தும் என்றும் விளக்கம் அளித்தது. அதாவது, வங்கிக் கணக்கு அடிப்படையிலான யு.பி.ஐ. பேமெண்ட்டுகள், சாதாரண யு.பி.ஐ. பேமெண்ட்டுகளுக்கான வங்கிக் கணக்கிற்கு எவ்வதக் கட்டணமும் விதிக்கப்படாது என்று தெளிவுபடுத்திது.

ஆனால், இதையும் மறைத்த உ.பிஸ்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தனர். இந்த சூழலில், யு.பி.ஐ. கட்டணம் தொடர்பாக, நெட்டிசன்கள் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், எப்படியெல்லாம் உ.பிஸ்கள் மக்களை திசை திருப்புகிறார்கள் என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை தேச பக்தர்கள் அதிகளவில் பகிர்ந்து மக்களுக்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். ஆகவே, இதை நாமும் அதிகளவில் பகிர்ந்தால், ஏராளமானோர் நிம்மதி அடைவார்கள்.


Share it if you like it