அடப்பாவமே… காங்கிரஸ் கட்சிக்கு இப்படியொரு  நிலைமையா..?

அடப்பாவமே… காங்கிரஸ் கட்சிக்கு இப்படியொரு நிலைமையா..?

Share it if you like it

உ.பி-யில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியுள்ளது. மேலும், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பலர் தங்களது டெபாசிட் தொகையை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் ஆட்சி செய்த காங்கிரஸ். இன்று இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்யும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெறும் அனைத்து மாநில தேர்தல்களிலும், தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது காங்கிரஸ். இந்தியாவே உன்னிப்பாக கவனித்து வந்த உ.பி சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

பா.ஜ.க போட்டியிடும் அனைத்து மாநிலங்களிலும் தோல்வியை தழுவும். என்று தி.மு.க மற்றும் அதன் ஆசி பெற்ற ஊடகங்கள் தமிழக மக்களிடம் ஆருடம் கூறி வந்தது. ஆனால், அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி. பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. இது தான் தற்பொழுது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக பார்க்கப்படும் உ.பி.யில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளது. மொத்தமாக தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் 4,442. பெரும்பான்மைக்கு தேவையான 202 இடங்களையும் தாண்டி, ஆளும் பா.ஜ.க கட்சி 273 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் 399 பேர். இதில், வெற்றி பெற்றவர்கள் வெறும் 2 பேர் மட்டுமே. மேலும், 97% வேட்பாளர்கள் தங்களது வைப்பு தொகையை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் மிக நெருங்கிய கூட்டாளிகளான கம்யூனிஸ்ட்கள் போட்டியிட்ட மாநிலங்களில் பெற்ற வாக்கு சதவீதம் இதோ.

கம்யூனிஸ்ட்கள் பெற்ற வாக்கு சதவீதம்.

உத்தரப்பிரதேசம்.

சிபிஐ : 0.07% சதவீத வாக்குகள்.

சிபிஐஎம் : 0.01%

மணிப்பூர்
CPI : 0.06%

உத்தரகாண்ட்
CPI : 0.04%
CPIM : 0.04%

பஞ்சாப்
CPI : 0.05%
CPIM : 0.03%


Share it if you like it