தேசிய கொடிக்கு பதிலாக பாகிஸ்தான் கொடியை ஏற்றிய இஸ்லாமிய அடிப்படைவாதியை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். 75-வது சுந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதையடுத்து, உ.பி. மாநிலத்தை சேர்ந்த மக்களும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
இதனிடையே, உ.பி. மாநிலம் குஷி நகரை சேர்ந்தவர் சல்மான். இவர், தனது இல்லத்தில் இந்திய கொடிக்கு பதிலாக, பாகிஸ்தான் கொடியை ஏற்றி ஏற்றி இருக்கிறார். இதுதவிர, பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷத்தையும் முழங்கியதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இதனை தொடர்ந்து, இச்செய்தி நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, களத்தில் இறங்கிய உ.பி. காவல்துறையினர் சல்மானை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சல்மான் வீடு ஆக்கிரமிப்பு இடமாக இருக்கும் பட்சத்தில், நாளை புல்டோசர் செல்லும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.