பா.ஜ.க.வில் இணையும் சமாஜ்வாதி கட்சி பெண் எம்.எல்.ஏ.!

பா.ஜ.க.வில் இணையும் சமாஜ்வாதி கட்சி பெண் எம்.எல்.ஏ.!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி பெண் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. யோகியின் அதிரடி நடவடிக்கையால் முஸ்லீம்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும் பா.ஜ.க.வுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. முதல்வர் யோகியை அம்மாநில முஸ்லீம் பெண்களும், ஆண்களும் புகழ்ந்து பேசிய வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில்தான், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவர் பா.ஜ.க.வில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உ.பி.யில். எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ். இவரது கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. பூஜாபவுல். இவர், தற்போது கவுஷாம்பி மாவட்டம் சாலி தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர்தான் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணையப் போவதாக அம்மாநில உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. விரைவில் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து கட்சியில் இணையப் போவதாக கூறப்படுகிறது.


Share it if you like it