Share it if you like it
- ஒரு பூஜை கூட நடக்காமல் 11,999 கோயில்களின் நிலை உள்ளது.
- 34,000 கோயில்கள் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக வருமானத்தை வைத்து கொண்டு போராடுகிறது.
- 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்!
- பக்தர்கள் கோயில்களை பராமரிக்கும் படி விட்டு விடுங்கள். என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர். சத்குருவின் கருத்திற்கு பிரபல நடிகர் சந்தானமும் தனது ஆதரவு தெரிவித்து இருந்தார்.
- ஸ்ரீரங்கம் – 14ம் நூற்றாண்டு கோவில்; ஒரு தீவிர பக்தை அன்னிய படையெடுப்பின் போது தன் உயிரைத் தியாகம் செய்து தெய்வச்சிலையை காத்தாள். அதே கோவிலில் சிலை திருட்டுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது மிகுந்த அவமானத்திற்குரியது
- ஸ்ரீ அர்தநாரீசுவரர் கோவில், கள்ளக்குறிச்சி – கோவில் நிலத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு தடைவிதிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது, நம்மை அவமானத்தில் தலைகுனியச் செய்கிறது. கோவில்களில் பக்திதான் ஒரே அதிகாரமாய் இருக்கவேண்டும்.
- தமிழ்கலாச்சாரம், பக்தியில் தோய்ந்த ஒரு கலாச்சாரம். இலக்கியம், கலை, இசை & நடனம் முதற்கொண்டு, கோவில்கள் பக்தியின் வெளிப்பாடாக விளங்கின. கோவில்களை சிதைந்துப் போகவிட்டால், தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையே சிதைந்துபோக விட்டுவிடுவோம்
- பாரதத்திலுள்ள 1 லட்சம் கல்வெட்டுகளில் 60,000 தமிழ்நாட்டில் உள்ளன; கவனமும் திறமையும் இல்லாமல் செய்யப்படும் புணரமைப்பால் இவை படிப்படியாக சிதைந்து வருகின்றன. பூமியில் மிக தொன்மையான நாகரிகத்தின் பல்லாயிரமாண்டு பழமையான பதிவுகளை இழக்கும் நிலையில் உள்ளோம்.
- “கோவில் செழித்தால் நாடு செழிக்கும்” – தொன்மையான தமிழ் பொன்மொழி இது. இது செல்வச் செழிப்பு பற்றியல்ல, செழுமையான கலாச்சாரத்தை பேணி வளர்க்கையில், செல்வச்செழிப்பு அதன் இயல்பான விளைவாய் நிகழும்.
- கிட்டத்தட்ட 12,000 கோவில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இதே நிலைமை நீடித்தால், கோவில்கள் அருங்காட்சியகங்களாக & நினைவுச் சின்னங்களாக மாறிவிடும். கோவில்களின் தனிச்சிறப்பே வளர்ச்சிதான், பதப்படுத்தி வைக்கப்படுவது அல்ல. என்று தனது ஆதங்கத்தை அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார்.
- பா.ஜ.க ஆளும் உத்தரகண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் 51 கோவில்களை பக்தர்களே நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
இதனை தொடர்ந்து தனது வேண்டுகோளை தமிழக அரசிற்கு மீண்டும் இவ்வாறு முன்வைத்து உள்ளார் சத்குரு.
உத்தரகண்ட் மாநிலம் போன்று, தமிழகத்தில் உள்ள கோவில்களையும், தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 12,000 கோவில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இதே நிலைமை நீடித்தால், கோவில்கள் அருங்காட்சியகங்களாக & நினைவுச் சின்னங்களாக மாறிவிடும். #கோவில்அடிமைநிறுத்து. கோவில்களின் தனிச்சிறப்பே வளர்ச்சிதான், பதப்படுத்தி வைக்கப்படுவது அல்ல. -Sg
— Sadhguru (@SadhguruJV) March 18, 2021
Share it if you like it