பி.எஸ்.பி. எம்.எல்.ஏ. கொலை வழக்கு சாட்சி கொலை: அதீக் அகமது உறவினர்களின் வீடுகளில் ‘புல்டோசர்’!

பி.எஸ்.பி. எம்.எல்.ஏ. கொலை வழக்கு சாட்சி கொலை: அதீக் அகமது உறவினர்களின் வீடுகளில் ‘புல்டோசர்’!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முக்கிய சாட்சியை கொலை செய்த முக்கிய குற்றவாளி அதீக் அகமது உறவினர்களின் வீடுகளை புல்டோசர் தரைமட்டமாக்கியது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜு பால் கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்தது முலாயாம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ.வான அதீக் அகமது. பிரபல தாதாவான அதீக் அகமது, 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறான். இவனது சகோதரர் அஷ்ரப் அசீமை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால்தான் ராஜு பாலை கொலை செய்தார். எனினும், அரசியல் நெருக்கடி காரணமாக கைது செய்யப்பட்ட அதீக் அகமது, தற்போது சிறையில் இருந்து வருகிறான். எனினும், தனது அடியாட்கள் மூலம் அராஜக செயல்களை தொடர்ந்து வருகிறான். இதற்கு பக்கபலமாக அவனது மனைவி ஷயிஸ்தா பர்வீன், 5 மகன்கள் மற்றும் சகோதரர் அஷ்ரப் அசீம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், ராஜு பால் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர், வக்கீல் உமேஷ் பால். இவர் மட்டும் சாட்டி சொல்லி விட்டால், அதீக் அகமதுவுக்கு கண்டிப்பாக இரட்டை ஆயுள் அல்லது மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே, உமேஷ் பாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். எனினும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார் உமேஷ் பால். வெளியில் எங்கு சென்றாலும் போலீஸ் பாதுகாப்புடன்தான் செல்வார். இந்த சூழலில், உமேஷ் பாலை தீர்த்துக்கட்ட அதீக் அகமது கொடுத்த ஐடியாப்படி, அவரது வீட்டில் மனைவி, மகன்கள் மற்றும் சகோதரர் அஷ்ரப் அசீம் ஆகியோர் திட்டம் தீட்டி இருக்கிறார்கள். அதன்படி, கடந்த 24-ம் தேதி, உமேஷ் பாலின் வீட்டிற்கு அருகே அதீக் அகமதுவின் மகன்கள் மற்றும் சகோதரர் ஆகியோர் பதுங்கி இருந்தார்கள்.

இதையறியாத உமேஷ் பால், காரில் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர், காரை விட்டு இறங்கியதும் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் அதீக் அகமதுவின் மகன்கள், சகோதரர் மற்றும் கூலிப்படையினர். இதை தடுக்கு முயன்ற பாதுகாப்பு போலீஸார் மீதும் அக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், உமேஷ் பால், அவரது பாதுகாப்புக்கு வந்த 3 போலீஸ்காரர்களும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், உமேஷ் பாலும், ஒரு போலீஸ்காரரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 2 போலீஸ்காரர்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அதீக் அகமதுவின் கும்பலை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் செய்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். இதன் பிறகு, போலீஸ்காரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் அதீக் அகமதுவின் கைத்தடிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து, அதீக் அகமதுவுக்குச் சொந்தமான வீடு, அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் கைத்தடிகளின் வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அந்த வகையில், அதீக் அகமது மற்றும் அவரது கும்பலுக்கு நெருக்கமான 20 நபர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, பிரயாக்ராஜ், தெலியார்கஞ்ச், சாக்கியா, துமங்கஞ்ச், சேலம்சராய், ஹர்வாரா, ஜெயந்திபூர், சடியாபூர், மிண்டேரா, ஜால்வா மற்றும் அதாலா ஆகிய இடங்களிலுள்ள அவர்களது சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களது வீடுகள் மீது புல்டோசர் நடவடிக்கை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை முதல் புல்டோசர் நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது.

முதல் கட்டமாக, பிரயாக்ராஜின் கரேலி காவல் நிலையத்துக்குட்டபட்ட சாக்கியாவில் அமைந்துள்ள அதீக் அகமதுவின் உறவினரான காலித் ஜாஃபருக்குச் சொந்தமான வீட்டை பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் (பி.டி.ஏ.) இன்று இடித்தது. இந்த வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, மற்றவர்களின் வீடுகளும் தொடர்ந்து இடிக்கப்படும் என்று தெரிகிறது.


Share it if you like it