திரிவேணி சங்கமத்தில் ஹூக்கா, மாமிசம்: ஹசன் அகமது, முகமது ஆசிப் கைது!

திரிவேணி சங்கமத்தில் ஹூக்கா, மாமிசம்: ஹசன் அகமது, முகமது ஆசிப் கைது!

Share it if you like it

உ.பி.யில் மத உணர்வை புண்படுத்தும் வகையில், கங்கை நதியில் திரிவேணி சங்கமத்தில் ஹூக்கா புகைத்தும், மாமிசம் சாப்பிட்டும் அவதூறு செய்த ஹசன் அகமது, முகமது ஆசிப் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தியாவில் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் நிந்திக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஹிந்துக்களின் விழாக்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்வீசித் தாக்குதல் நடத்துவதையும், ஹிந்துக் கோயில்களில் இருக்கும் சிலைகளை அடித்து உடைப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இந்த சூழலில்தான், ஹிந்துக்கள் புனித நதியாகக் கருதும் கங்கை நதியில், ஹூக்கா போதையை ஏற்றிக் கொண்டும், மாமிச உணவுகளை சாப்பிட்டும், ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்டிருக்கிறார்கள் சில அடிப்படைவாதிகள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஹசன் அகமது மற்றும் முகமது ஆசிப். இருவரும் தங்களது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஒரு படகை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். பின்னர், பிரயாக்ராஜ்ஜில் கங்கை நதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்கிற இடத்தில் ஹூக்கா போதையை புகைத்துக் கொண்டு, மாமிச உணவை சாப்பிட்டிருக்கிறார்கள். இந்த காணொளி சமூக  வலைத்தளங்களில் வைரலானது. கங்கை நதியில் திரிவேணி சங்கமம் என்பது ஹிந்துக்களால் புனிதமான இடமாகக் கருதப்படுவதாகும். ஆகவே, இந்த விவகாரம் ஹிந்துக்கள் மத்தியில் கடும் புயலைக் கிளம்பியது.

இதையடுத்து, இதுகுறித்து பிரயாக்ராஜ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஹசன் அகமது மற்றும் முகமது ஆசிப் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஆஸ்தா ஜெய்ஸ்வால் கூறுகையில், “புனிதத் தலத்தில் வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள 6 பேரையும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.


Share it if you like it