லவ் ஜிகாத்… ஆபாச வீடியோ… ஹிந்து சிறுமி தற்கொலை: இர்பான் மற்றும் குடும்பத்தினருக்கு போலீஸ் வலைவீச்சு!

லவ் ஜிகாத்… ஆபாச வீடியோ… ஹிந்து சிறுமி தற்கொலை: இர்பான் மற்றும் குடும்பத்தினருக்கு போலீஸ் வலைவீச்சு!

Share it if you like it

11-ம் வகுப்பு படித்த ஹிந்து சிறுமியை, இர்ஃபான் என்கிற அடிப்படைவாதி, லவ் ஜிகாத் எனும் காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். பின்னர், அச்சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால், அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் கோடா பகுதியைச் சேர்ந்தவர் சிந்து (பெயர் மாற்றம்). 19 வயது இளம்பெண்ணான இவர், அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் இர்பான் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதி, அச்சிறுமியை லவ்ஜிகாத் எனும் காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். பின்னர், அச்சிறுமியை தனியாக அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்திருக்கிறான். பின்னர், அந்த வீடியோவை காட்டி மாணவியை தவறாக வழிநடத்த முயற்சி செய்திருக்கிறான். எனினும், மாணவி உடன்படவில்லை. மேலும், இதுகுறித்து கடந்த சனிக்கிழமை அச்சிறுமி கோடா காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். ஆனால், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாணவி போலீஸில் புகார் செய்த விஷயம் தெரியவந்ததால் ஆத்திரமடைந்த இர்ஃபான், மாணவியின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டான். இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். பின்னர், சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த இர்ஃபான் மற்றும் அவனது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திராபுரத்தின் உதவி போலீஸ் கமிஷனர் ஸ்வதந்த்ர குமார் சிங், “இறந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாணவி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினரின் அலட்சியம் குறித்தும் விசாரணை நடத்தப்படும். போலீஸார் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it