பாலியல் பலாத்காரம் செய்ய முடியாததால், 13 வயது ஹிந்து சிறுமியை துடிதுடிக்கக் கொன்ற முகமது நவ்ஷாத் என்பவனை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவனது வீட்டையும் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது உத்தரப் பிரதேச மாநில அரசு.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் நாகரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தடிப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் பாண்டே. இவரது மகள் கும்கும் பாண்டே (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). 13 வயது சிறுமி. இவர்களது வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தூரத்தில் வசிப்பவர் முகமது நவ்ஷாத். இஸ்லாமிய இளைஞர். இருவரது வீடும் அருகருகே இருந்ததால், நவ்ஷாத் குடும்பத்தினரும், ராஜ் பாண்டே குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார்கள். இதனால், நவ்ஷாத்தும் அடிக்கடி ராஜ் பாண்டே வீட்டிறுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ராஜ் பாண்டேவும் நவ்ஷாத்தை தனது மகனைப் போலவே பாவித்து வந்திருக்கிறார். அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் டீ கொடுப்பது, சாப்பாடு கொடுப்பது என இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், பக்கத்து ஊரில் நடந்த கண்காட்சிக்கு தனது நண்பர்களுடன் சென்றிருக்கிறார் கும்கும் பாண்டே. கண்காட்சியைப் பார்வையிட்டு விட்டு திரும்பியபோது, டூவீலரில் வந்த நவ்ஷாத், வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி கும்கும் பாண்டேவை அழைத்து வந்திருக்கிறார். ஆனால், நேராக வீட்டுக்குச் செல்லாமல், ஒரு காட்டுப் பகுதிக்குள் சென்றிருக்கிறார். பின்னர், அங்கு வைத்து கும்கும் பாண்டேவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், இதற்கு கும்கும் பாண்டே இடம் தரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த நவ்ஷாத், அச்சிறுமியை சரமாரியாக கன்னத்தில் தாக்கி இருக்கிறான். மேலும், அவரது இரு கைகளின் நரம்பையும் துண்டித்திருக்கிறான். அப்படியும் அவனது ஆத்திரம் தணியாததால், அச்சிறுமியின் கால் எலும்புகளை நொறுக்கி, காலையும் துண்டிக்க முயற்சி செய்திருக்கிறான்.
இதன் பிறகு, அச்சிறுமியை குற்றுயிரும் குலையுயிருமாக அங்கேயே போட்டுவிட்டு, தப்பிச் சென்று விட்டான். இரவு முழுவதும் சிறுமியைக் காணாததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், தேடி அலைந்திருக்கின்றனர். இந்த சூழலில், தங்களது கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள காட்டுப் பகுதியில் பலத்த காயங்களுடன் கும்கும் பாண்டே கிடப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. விரைந்து சென்ற குடும்பத்தினரும், போலீஸாரும் கும்கும் பாண்டேவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி கும்கும் பாண்டே இறந்து விட்டார். இதையடுத்து, குற்றவாளி நவ்ஷாத்தை போலீஸ் தீவிரமாகத் தேடிவந்தது. தலைமறைவாக இருந்த நவ்ஷாத்தை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுப் பிடித்து கைது செய்தனர். பின்னர், உத்தரப் பிரதேச மாநில அரசு நவ்ஷாத்தின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது.