லவ் ஜிகாத்துக்கு மறுத்த ஹிந்து சிறுமியின் கழுத்து, முகத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய டேனிஷ் கானை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்ஸி மாவட்டம் குவாலியர் சாலையைச் சேர்ந்தவர் ஹேமா (பெயர் மாற்றம்). பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தந்தை இறந்து விட்ட நிலையில், தாயார், இரு சகோதரிகள், ஒரு சகோதரனுடன் வசித்து வருகிறார். இவரை, அதே பகுதியான கராரி கிராமத்தைச் சேர்ந்த முகமது டேனிஷ் கான் என்கிற இஸ்லாமிய இளைஞர், ஒருதலைபட்சமாக காதலித்து வந்திருக்கிறார். இதனால், ஹேமா தினமும் காலையில் பள்ளிக்குச் செல்லும்போதும், மாலையில் ஆங்கில பயிற்சி வகுப்புக்குச் செல்லும்போதும் பின்தொடர்ந்து வந்திருக்கிறார். ஆனால் ஹேமாவோ, டேனிஷின் காதலை ஏற்க மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த டேனிஷ், ஒரு நாள் ஹேமாவை பின் தொடர்ந்து வந்து மானபங்கம் செய்திருக்கிறார். மேலும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால், ஹேமாவும் பயந்துகொண்டு பெற்றோர் உட்பட யாரிடமும் சொல்லவில்லை. இதன் பிறகு, டேனிஷை கண்டாலே தலைதெறிக்க ஓடியிருக்கிறார் ஹேமா.
இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் மிஷன் வளாகம் அருகேயுள்ள ஆங்கில பயிற்சி வகுப்புக்கு ஹேமா சென்றிருக்கிறார். அப்போது, பின் தொடர்ந்து வந்த டேனிஷ் கான், வழி மறித்து தகராறு செய்திருக்கிறார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹேமாவின் கழுத்திலும், முகத்திலும் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில், மாணவியின் முகம், கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதைக் கண்ட முகமது டேனிஷ் கான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பின்னர், மாணவி ஹேமா எப்படியோ தட்டுத்தடுமாறியபடியே பயிற்சி மையத்தை சென்றடைந்திருக்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த ஆசிரியர்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து ஹேமாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு மாணவிக்கு கழுத்து மற்றும் முகத்தில் 31 தையல்கள் போடப்பட்டிருக்கிறது. தற்போது மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில், “கடந்த 2 ஆண்டுகளாகவே எனது மகளை டேனிஷ் கான் துன்புறுத்தி வந்தார். பயிற்சி மையத்திலிருந்து எனது மகளின் போன் நம்பரை பெற்று, பல்வேறு நம்பர்களில் இருந்து போன் செய்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். மறுத்த எனது மகளை பின்தொடர்ந்து சென்று மானபங்கம் செய்தார். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியதால், பயந்துகொண்டு வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. இதன் பிறகும், அவனிடம் பேச மறுத்ததால், எனது மகளை கத்தியால் குத்தி இருக்கிறான். எனது மகளை விட டேனிஷ் சுமார் 8 முதல் 10 வயது மூத்தவர்” என்றார்.
இது தொடர்பாக, கோட்வாலி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் துளசிராம் பாண்டே கூறுகையில், “சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தோம். குற்றம்சாட்டப்பட்ட டேனிஷை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகிறோம்” என்றார்.