உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேசியக்கொடியை வைத்து சைக்கிள் டயர், வீல் ஆகியவற்றை துடைத்த மெக்கானிக்கை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாரத தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதையொட்டி, 75-வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்தார். ஆகவே, நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, கடந்த 15-ம் தேதி நாடு முழுவதிலுமுள்ள தேசபக்தர்கள், தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடினார்கள். ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றிவர்கள், 16-ம் தேதி காலையில் கொடிகளை கழற்றி வீடுகளில் பத்திரப்படுத்தி வைத்தனர். காரணம், தேசியக்கொடி என்பது மிகவும் மரியாதைக்குரியது.
இந்த நிலையில்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒருவன் தேசியக்கொடியை அவமதித்திருக்கிறான். அதாவது, உ.பி. மாநிலம் பதோஹியில் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்திருக்கும் ஒருவன், தேசியக்கொடியைக் கொண்டு சைக்கிள் டயர் மற்றும் வீல் ஆகியவற்றை துடைத்துக் கொண்டிருக்கிறான். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்திருக்கிறார்கள். உடனே, தான் தேசியக்கொடியால் துடைக்கிறேன், உங்களால் என்ன செய்ய முடியும் என்பதுபோல், திமிர்த்தனமாக கொடியை விரித்தும் காண்பிக்கிறான். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது உத்தரப் பிரதேச மாநில போலீஸார், அந்த மெக்கானிக்கை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே, இதேபோல ஜம்மு காஷ்மீரில் கடந்தாண்டு ஒரு சம்பவம் அரங்கேறியது. அதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உமைர் அகமது என்கிற கார் மெக்கானிக், தேசியக்கொடியை வைத்து காரை துடைத்திருக்கிறார். இதைக்கண்ட தேசபக்தர்கள் சிலர், இக்காட்சிகளை வீடியோ எடுத்தோடு, அவனிடம் சென்று தேசியக்கொடியை அவமதித்தற்காக மன்னிப்புக் கேட்கும்படி வலியுறுத்தினார்கள். ஆனால், அவன் மன்னிப்புக் கேட்க முடியாது என்று மறுத்து விட்டான். எனினும், மேற்கண்ட தேசபக்தர்கள் விடவில்லை. மன்னிப்புக் கேட்டே தீரவேண்டும் என்று உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி அவன் மன்னிப்புக் கேட்டான். இந்த வீடியோவும் கடந்தாண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தேச விரோதிகள், அடிப்படைவாத அமைப்பினர் உள்ளிட்ட சிலரால் திட்டமிட்டு தேசியக்கொடி அவமதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆகவே, இதுபோன்ற நபர்களை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தும், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தும், அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் செய்தால்தான் திருந்துவார்கள் என்பது தேசபக்தர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகவே, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.