உத்தரப் பிரதேசத்தில் காய்கறிகளில் சிறுநீர் கழித்து ஹிந்துக்களுக்கு விற்பனை செய்து வந்த ஷெரீப் என்பவரை, உள்ளூர்வாசிகள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் இசத்நகர் பகுதியில் ஹிந்துக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் ஷெரீப். இவரிடம்தான் ஹிந்துக்கள் காய்கறி வாங்குவது வழக்கம். இந்த சூழலில், இதே பகுதியைச் சேர்ந்த துர்கேஷ் குப்தா என்பவர், தனது காரை எடுத்துக் கொண்டு வெளியில் புறப்பட்டார். அப்போது, வழியில் காய்கறி வியாபாரி ஷெரீப், காய்கறி வண்டியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே, காரை நிறுத்தி காய்கறிகளில் ஷெரீப் சிறுநீர் கழிப்பதை அப்படியே வீடியோவாக பதிவு செய்தார். பின்னர், அந்த வீடியோவை லோக்கலில் வசிக்கும் மக்களிடம் போட்டுக்காட்டி இருக்கிறார்.
இதையடுத்து, துர்கேஷ் குப்பா உள்ளிட்ட லோக்கல் பிரமுகர்கள், ஷெரீப்பை பிடித்து காய்கறிகளில் சிறுநீர் கழித்தது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு, தான் சிறுநீர் கழிக்கவில்லை என்று ஷெரீப் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். ஆனால், துர்கேஷ் குப்தா தான் எடுத்த வீடியோவை போட்டுக் காட்டியதும், ஷெரீப்பால் பதில் சொல்ல முடியவில்லை. பின்னர், லோக்கல் பிரமுகர்கள் சேர்ந்து ஷெரீப்புக்கு தர்ம அடி கொடுத்து, பூர்த்தபூர் சவித்ரி போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஷெரீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் மாவட்டத் தலைவர் ஹர்ஷ் பரத்வாஜ் கூறுகையில், “ஷெரீப் பல ஆண்டுகளாக இப்பகுதியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். ஷெரீப்பின் வயது மற்றும் கடின உழைப்பைக் கருத்தில் கொண்டு, அக்கம்பக்கத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இவரிடம்தான் காய்கறிகளை வாங்குவார்கள். இதில், அதிகம் பேர் ஹிந்துக்கள்தான். ஆனால், ஷெரீப்பின் இந்தச் செயலால், அவர் மீதிருந்த மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது” என்றார்.