பட்டியலின மைனர் சகோதரிகள் கூட்டு பலாத்காரம், கொலை: சுஹைல், ஜுனைத் உட்பட 6 பேர் கைது!

பட்டியலின மைனர் சகோதரிகள் கூட்டு பலாத்காரம், கொலை: சுஹைல், ஜுனைத் உட்பட 6 பேர் கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 2 மைனர் சகோதரிகள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சுஹைல், ஜுனைத், கரிமுதீன், ஹபிசுல் ரஹ்மான், ஆரிப், சோட்டு ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெரி அருகே உள்ளது தமோலியாபுர்வா என்கிற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவன் சோட்டு என்கிற கவுதம். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன். இவனது நண்பர்கள் சுஹைல், ஜுனைத், கரிமுதீன், ஹபிசுல், ரஹ்மான் ஆகியோர். சோட்டுவின் பக்கத்து வீட்டில் முறையே 15, 17 வயதுடைய சகோதரிகள் வசித்திருக்கிறார்கள். இச்சகோதரிகள் இருவரையும் தனது நண்பர்களான சுஹைல், ஜுனைத் உள்ளிட்ட 5 இஸ்லாமிய நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறான் சோட்டு.

இந்த நிலையில், சுஹைல், ஜுனைத் உள்ளிட்ட 6 பேரும், கடந்த 14-ம் தேதி 3 பைக்குகளில் தமோலியாபுர்வா கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். பின்னர், சகோதரிகள் இருவரையும் வலுக்கட்டாயமாக பைக்குகளில் கடத்திச் சென்றிருக்கிறார்கள். பக்கத்திலுள்ள கரும்புத் தோட்டத்திற்குள் சகோதரிகள் இருவரையும் தூக்கிச் சென்று, 6 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பின்னர், விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்று கருதிய 6 பேரும், சகோதரிகள் இருவரையும் அவர்களது துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்கள். இதன் பிறகு, சகோதரிகள் இருவரது உடலையும், கருப்புத் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை போல மாற்ற முயன்றிருக்கிறார்கள்.

இதனிடையே, மகள்களை காணாதது கண்டு பதறிப்போன தாய், பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது, கரும்புத் தோட்டத்திலுள்ள மரத்தில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடப்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து சகோதரிகளின் தாய் நிகாசன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும், சகோதரிகளின் உறவினர்களும், ஊர் மக்களும், குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி, நிகாசன் சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பின்னர், போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளான சுஹைல், ஜுனைத், கரிமுதீன், ஹபிசுல் ரஹ்மான், ஆரிப், சோட்டு ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.


Share it if you like it