பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சீனா!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சீனா!

Share it if you like it

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து நடந்து வருவது இந்தியாவையும், அமெரிக்காவையும் ஆத்திரப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் ஐ.நா. சபையில் தொடர்ந்து தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன. ஆனால், சீனாவோ தனது வீட்டோ பவரை பயன்படுத்தி, அத்தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. உதாரணமாக, கடந்த ஜூன் மாதம் அப்துல் ரஹ்மான் மக்கி என்ற பயங்கரவாதிக்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தன. இற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. அதேபோல, கடந்த மாதம் ஜெயிஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சகோதரன் மற்றும் சில பயங்கரவாதிகளுக்கு எதிராக, இந்தியாவும், அமெரிக்காவும் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்திற்கும் சீனா தடை விதித்திருந்தது. அந்த வகையில், தற்போது மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கியக் குற்றவாளியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, இந்தியா ஆதரவுடன் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் தடை விதித்து விட்டது சீனா.

அதாவது, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் சஜித் மிர். இவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அல்கொய்தா தடை கமிட்டி முன்பு, இந்தியா ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தில் சஜித் மிர்ரின் சொத்துகளை முடக்குவது, வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிப்பது, ஆயுதங்கள் கிடைக்க தடை விதிப்பது உள்ளிட்டவை அடங்கும். தவிர, சஜித் மிர் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாகவும் அளித்திருந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஆனால், சீனாவோ தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்து விட்டது. அதேசமயம், பாகிஸ்தானோ சஜித் மிர்ருக்கு சிறை தண்டனை விதித்திருக்கிறது. அதாவது, பயங்கரவாதத்துக்கு நிதியளித்த விவகாரத்தில், சர்வதேச நிதிக்குழுவின் ‘கிரே’ பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படவிருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் சஜித் மிர்ருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்தது. ஆனால், மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் சஜித் மிர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it