கைரேகை வைத்தால் போதும்… தானியம் கொட்டும்: அசத்தும் யோகி மாடல்… க்யூவில் திராவிட மாடல்!

கைரேகை வைத்தால் போதும்… தானியம் கொட்டும்: அசத்தும் யோகி மாடல்… க்யூவில் திராவிட மாடல்!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை வைத்தால் போதும், உணவு தானியங்கள் தானாக கொட்டும் வகையில், முதல்வர் யோகி ஏற்பாடு செய்து அசத்தி இருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 24 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் ரேஷன் கடைகளில் கால் கடுக்க நின்று அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை வாங்கி வந்தனர். மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து மனம் உருகிய முதல்வர் யோகி ஆதித்யநாத், உணவு தானிய ஏ.டி.எம்.களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். முதல்கட்டமாக வாரணாசி, நொய்டா ஆகிய பகுதியில் உணவு தானிய ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, லக்னோவில் 3-வது ஏ.டி.எம்.மை திறந்து வைத்திருக்கிறார் யோகி.

ரேஷன் கடைக்குச் சென்று தங்களது ரேஷன் கார்டையும், கைரேகையையும் பதிவு செய்து விட்டால் போதும். இதன் பிறகு, கால் கடுக்க க்யூவில் நின்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நேராக உணவு தானிய ஏ.டி.எம்.முக்குச் சென்று கைரேகை பதிவு செய்தால் போதும், ரேஷன் பொருட்கள் தானாக கொட்டும். இந்த ஏ.டி.எம்.மில் 2 கொள்கலன்கள் இருக்கின்றன. ஒன்றில் அரிசியும், மற்றொன்றில் கோதுமையும் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். கைரேகையை பதிவு செய்தவுடன், அரசி, கோதுமை ஆகியவை தலா 7 கிலோ கொட்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சில நிமிடங்களிலேயே இந்த செயல்பாடு முடிந்து விடும். இதனால், நேரம் மிச்சம் என்பதோடு, எடை குறைவு பிரச்னையும் இருக்காது.

24 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே உணவு தானிய ஏ.டி.எம்.மை கொண்டு வந்து விட்டார் யோகி. ஆனால், வெறும் 8 கோடி பேர் மட்டுமே வசிக்கும் தமிழகத்தில் இன்றளவும் மக்கள் க்யூவில் கால்கடுக்க நின்றுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. இந்த லட்சணத்தில் நம்பர் ஒன் முதல்வர், நம்பர் ஒன் மாநிலம் என்று பீற்றிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இதுதான் திராவிட மாடல் போல என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it