அப்புடி என்னய்யா பண்ணிட்டாரு எங்க அண்ணே… வடிவேலு பாணியில் செ.பா.வை கலாய்த்த இளைஞர்!

அப்புடி என்னய்யா பண்ணிட்டாரு எங்க அண்ணே… வடிவேலு பாணியில் செ.பா.வை கலாய்த்த இளைஞர்!

Share it if you like it

எல்லாம் அவன் செயல் திரைப்படத்தில் அப்புடி என்னய்யா தப்பு பண்ணிட்டான் என் கட்சிக்காரன் என்று வடிவேலு பேசுவதுபோல, அமைச்சர் செந்தில்பாலாஜியை கலாய்த்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் இளைஞர் ஒருவர்.

தமிழில் வெளியான ‘எல்லாம் அவன் செயல்’ என்கிற படத்தில் வக்கீல் வண்டு முருகனாக நடித்திருக்கும் வைகைப்புயல் வடிவேலு, ஒரு காட்சியில் “அப்புடி என்னய்யா தப்புப் பண்ணிட்டான் என் கட்சிக்காரன்” என்று ஒரு டயலாக் பேசுவார். படத்திலேயே மிகவும் நகைச்சுவை நிறைந்த இக்காட்சிதான் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களின் பேவரைட்டாக இருக்கிறது. அரசியலில் எது நடந்தாலும் இந்த காமெடி தொடர்பான மீம்ஸ்தான் முதலில் இடம்பெறும்.

அந்த வகையில், தற்போது செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் இந்த காமெடி மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதேசமயம், இந்த காமெடியை வைத்து வடிவேலு பேசுவதுபோலவே பேசி செந்தில்பாலாஜியை கலாய்த்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் ஒரு இளைஞர். அந்த வீடியோவில், “எங்க அண்ணன் செந்தில்பாலாஜி நெஞ்சு வலியால துடிச்சுப் போயி அழுதுட்டு இருக்காரு. கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லாம அவர பார்த்து எல்லாரும் சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லையா?

அப்புடி அவரு என்னதான் தப்புப் பண்ணிட்டாரு… டாஸ்மாக்ல பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வங்கி சின்னதா 300 கோடி ரூபாய்ல ஒரு வீடு கட்டினாரு. அது என்ன அவ்வளவு பெரிய தப்பா. 2ஜில ஊழல் பண்ணவங்க எல்லாம் ஜாலியா வெளிய சுத்திக்கிட்டு இருக்கிறப்ப பாட்டிலுக்கு 10 ரூபாய் வங்குறது குத்தமா? இது ஜனநாயக நாடுதானா?” என்று கேள்வி எழுப்புகிறார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்ப்பவர்கள் சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிவிடும் போல் இருக்கிறது. இந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்…


Share it if you like it