இதை பார்த்தாவது திருந்துங்க வைரமுத்து!

இதை பார்த்தாவது திருந்துங்க வைரமுத்து!

Share it if you like it

கல்வி, பொருளாதாரத்தை வளர்த்தால் தேசியக் கொடியை நாட்டு மக்கள் ஏற்றுவார்கள் என வைரமுத்து தெரிவித்த கருத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் 75-வது சுந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு இந்தியரும் மிகவும் ஆவலாக காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில், ‘அமுதப் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு நாட்டு மக்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து இருந்தது.

ஆகஸ்ட் மாதம் 13 -ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோடிகணக்கான மக்கள் தங்களது டி.பி.யில் தேசிய கொடியை வைத்து வருகின்றனர். இதுதவிர, அனைவரும் தேசிய கொடியை தங்களது இல்லத்தில் ஏற்றி வைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், பாடலாசிரியரும், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளருமான கவிஞர் வைரமுத்து, தேசியக் கொடியை இல்லங்கள்தோறும் ஏற்றுவது என்பது மக்களின் கல்வி, பொருளாதாரத்தோடு தொடர்புடையது 140 கோடி மக்களின் பொருளாதாரம், கல்வியை நாடு வளர்த்து கொடுத்தால், நீங்கள் கேடுக்கொள்ளாமலேயே ஒவ்வொரு இந்திய குடிமக்களும் எல்லா நாளும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.

Image

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தன் வீட்டில் அடுத்த வேலைக்கு உணவு இல்லை. யாரும் என் கல்வியும் பொருளாதாரமும் உயரட்டும் அதன்பிறகு தேச விடுதலைக்காக போராட நான் முன்வருகிறேன் என்று நினைக்கவில்லை. எங்கள், உயிரே போனாலும் கூட அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று பலர் தங்களது உயிரை நாட்டிற்காக கொடுத்து இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின், தியாகத்தை போற்றும் விதமாக ஒவ்வொரு இல்லத்திலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு நாட்டு மக்களிடம் கேட்டு கொண்டது.

ஆனால், கல்வி, பொருளாதாரத்தை வளர்த்தால் தேசியக் கொடி ஏற்றுவர் என்று வைரமுத்து கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குறியது என்பது பலரின் கருத்து. பாரத தேசத்தை உயிருக்கு நிகராக மதிக்கும் ஏழை, எளியவர்கள் கூட தேசிய கொடியை ஏற்றி தங்களது தேச உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், வைரமுத்து போன்றவர்கள் அவர்களை பார்த்தாவது திருந்துவாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Image

Share it if you like it