மாணவி லாவண்யா தற்கொலை: சி.பி.ஐ.க்கு மாற்ற வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

மாணவி லாவண்யா தற்கொலை: சி.பி.ஐ.க்கு மாற்ற வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Share it if you like it

கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளையும், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மேற்படி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பா. ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருக்கிறார்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம் மகள் லாவண்யா. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைகேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். சிறந்த மாணவியாகத் திகழ்ந்த லாவண்யாவை, தங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என்று அப்பள்ளியின் ஆசிரியர்கள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மறுத்த மாணவியை கழிவறையை சுத்தம் செய்து, பாத்திரம் கழுவ வைப்பது என டார்ச்சர் செய்ததால் கடும் மன அழுத்தத்தில் இருந்த மாணவி லாவண்யா, ஒரு கட்டத்தில் சித்ரவதை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன், மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலுயுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:-

Image

Share it if you like it