மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக
உள்ளது. ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது .இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வாய்ப்பே இல்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளதாக கூறிய அவர் தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்யவே முடியாது என்றார். மேலும் நீட் தேர்வுக்கு தமிழக அரசு பள்ளிகளில் முறையாக பயிற்சி அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.