வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவை – எதிர்க் கட்சிகளின் விமர்சனமும் இன்றைய பெருமிதமும்

வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவை – எதிர்க் கட்சிகளின் விமர்சனமும் இன்றைய பெருமிதமும்

Share it if you like it

சமீபகாலமாக மத்திய அரசு பொது போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் வகையில் நவீனமாக்கி வருகிறது. குறிப்பாக பெருவாரியான மக்களின் அதிவிரைவு போக்குவரத்தில் முதல் தேர்வாக இருக்கும் ரயில் போக்குவரத்தில் இந்த நவீனமும் கூடுதல் கட்டமைப்புகளும் அதிக அளவில் தேவைப்பட்டது. முழுக்க முழுக்க பாரதத்தின் உள்நாட்டு தயாரிப்பிலேயே கட்டுமானம் செய்யப்பட்ட அதிவிரைவு ரயில் சேவையை மத்திய ரயில்வே தேசத்திற்கு அர்ப்பணித்தது. முழுவதுமான உள்நாட்டு தயாரிப்பு தொழில்நுட்பங்கள் பராமரிப்பு உதிரி பாகங்கள் என்று எதற்கும் எந்த ஒரு நாட்டை சார்ந்திருக்க தேவையில்லை என்ற தன்னிறைவு வடிவமைப்பு பராமரிப்பு இயக்கம் என்று அனைத்தும் நம்முடையது என்ற பட்சத்தில் அதன் வெற்றிகரமான இயக்கமும் உயர்ந்த தொழில்நுட்பம் இலகுரக கையாளுகை நவீன பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய அத்தியாயம் என்ற வகையில் வந்தே பாரத் ரயிலுக்கு உள்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை வெற்றிகரமான தயாரிப்பாக வர்த்தக ரீதியான கட்டமைப்பாக மாற்றிய முயற்சியில் இன்னும் கூடுதல் பலன் கிடைத்தது. சொற்ப அளவிலான ரயில் சேவை கொண்ட நாடுகள் வரை தங்களின் ரயில் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக விரும்பும் நாடுகள் வரை அத்தனையும் வந்தே பாரத் ரயிலுக்காக பாரதத்திடம் வரிசை கட்டி நிற்கிறது. ஆனால் முதலில் உள்நாட்டு தற்சார்பு அதன் பிறகு தான் வர்த்தகம் என்று மத்திய அரசு கறார் காட்டி வருகிறது.

அதி விரைவான போக்குவரத்து சேவை உள்நாட்டு தயாரிப்பு என்ற பெருமிதம் பாதுகாப்பான சாலைப்போக்குவரத்து என்ற வகையில் வந்தே பாரத் ரயிலுக்கு வட இந்தியா முழுவதும் பெருத்த வரவேற்பு இருந்தது . ஆனால் தென்னிந்தியாவில் இந்த ரயில் சேவையையும் முன்வைத்து வழக்கம் போல மட்டமான அரசியலை செய்தார்கள். குறிப்பாக தமிழகத்தில் வந்தே பாரத் என்ற பெயரையே நொந்தே பாரத் என்று கொச்சைப்படுத்தி சுய இன்பம் கண்டார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலின் மீது வனங்களின் பயணித்த போது காட்டெருமைகள் மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முகப்பு பகுதி சேதமானது .அதை சரி செய்ய சில நாட்கள் தேவைப்பட்டது. பிறகு மீண்டும் முழுமையான பங்களிப்புடன் பயணத்தை தொடங்கியது .ஆனால் ஒரு காட்டெருமை மோதியதற்கே சேதாரம் ஆகும் அளவில்லா மோடி அரசின் ரயில் கட்டுமானம் இருக்கிறது? இதில் எத்தனை ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்தார்கள்? என்று மலிவான விமர்சனங்கள் வலம் வந்தது.

ஆனால் ஒரு காட்டெருமை மோதியும் ரயிலின் முகப்பு பகுதியில் லேசாக சேதாரம் அடைந்ததை தவிர உயிர் சேதமோ பெரும் பொருள் சேதமோ ஏற்படவில்லை. மாறாக ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து சேதம் என்ற அச்சுறுத்தலும் இல்லாத அளவில் இலகுவான ரயில் இயக்கமாக அதன் தொழில்நுட்பமும் பராமரிப்பும் வடிவமைப்பும் இருக்கிறது என்பதை யோசிக்கவோ . அதை முன்வைத்து ரயில் பயணங்களில் பாதுகாப்பும் நவீனமும் என்ற வகையில் நாம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கிறோம் என்ற அறிவார்ந்த சிந்தனையும் இங்கு யாருக்கும் இல்லை. ஆனால் அந்த வந்தே பாரத் ரயிலின் மீது வன்மத்தோடு கல் எறிந்து கண்ணாடிகளை உடைத்து அந்த ரயிலை சேதப்படுத்தியவர்களை மாவீரர்களாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அந்த வந்தே பாரத் ரயிலை கட்டுமானம் செய்த அரசாங்கத்தின் நிதியில் தன்னுடைய உழைப்பும் பங்களிப்பும் கூட ஒரு பைசா வேணும் இருக்கிறது . அந்த வகையில் அது தனக்கும் உரிமையான தன் தேசத்தின் ஒரு பொதுச் சொத்து . அதை வெறுமனே வன்மம் துவேஷம் கொண்டு எதிர்ப்பதும் அதன் மீது தாக்குதல் நடத்தி அதை சேதப்படுத்துவதும் தேசத்திற்கு எதிரான செயல் . அதை செய்பவர்கள் நிச்சயம் இந்த தேசத்திற்கு நன்மை செய்பவர்களாக இந்த மக்களுக்கு நண்பர்களாக நலம் விரும்பிகளாக இருக்க முடியாது என்ற புரிதல் இல்லை. இந்த நாட்டின் வளர்ச்சியை நமக்காக நம்முடைய அரசாங்கம் செய்யும் வளர்ச்சி திட்டத்தை நவீனமயமாக்களை இவ்வளவு வன்மத்தோடு அணுகுபவர்கள். நம் போன்ற தனி மனிதர்களை எவ்வளவு வன்மத்தோடு அணுகுவார்கள்? என்ற சுதாரிப்பும் இல்லை. ஆனால் அடித்து உடைக்கப்படுவது நம்முடைய பொதுச்சொத்து என்ற உணர்வு இல்லாமல் கல் எறிந்தவர்களை கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள்.

இன்னும் சில பிரகஸ்பதிகள் வந்தே பாரத் ரயிலில் உணவில் மெனு கார்டு இல்லை. பாயாசத்தில் பாதாம் பருப்பு இல்லை. பொங்கலில் முந்திரி இல்லை என்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்கள். பிரியாணி பரோட்டா நூடுல்ஸ் பீட்சா பர்கர் எதுவுமே வந்தே பாரத் ரயிலின் உணவு பட்டியலில் இல்லை . என்ன ரயில் விட்டார் மோடி? சாப்பிடுவதற்கு கூட வாய்க்கு ருசியா ஒண்ணுமே தரலையே என்று வந்தே பாரத் என்று நம்பி வந்தேன் நொந்தே பாரத் தாக திரும்பிப் போனேன் என்று அவர்களின் மட்டமான எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள்.

வந்தே பாரத் ரயில் சேவையை வட இந்திய முழுவதும் மக்கள் வரவேற்று மகிழ்ந்தார்கள் .கேரளா கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட எதிர்க்கட்சி அரசியல் என்பதை கடந்து தன் மாநிலத்திற்கு மத்திய அரசு மூலம் கிடைக்கும் நலத்திட்டமாக அடுத்த கட்டத்திற்கு போகும் வளர்ச்சி பணியாகவே மரியாதை செய்தார்கள். பல இடங்களில் கல்வீச்சு எதிர்ப்பு அவமதிப்பு நிகழ்ந்தாலும் பெருவாரியான மக்களுக்கு பொதுப் போக்குவரத்தில் ஒரு நவீனம் விமான போக்குவரத்துக்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் என்று ஒரு நவீனத்துவத்தை நடுத்தர மக்களும் அனுபவிக்கும் படியான ஒரு பொருளாதார பரவலாக்களாகவே வந்தே பாரத் ரயிலை மகிழ்ச்சியுடன் அணுகினார்கள்.

ஆனால் நாடு முழுவதற்கும் பொதுவாக எந்த ஒரு விஷயம் வந்தாலும் அதை எதிர்க்கும் பிரிவினைவாதத்தை மட்டுமே மனதில் வைத்திருக்கும் தமிழகத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு கிடைத்தது போல ஒரு அவமரியாதை தேசத்தில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. மாநிலத்தின் ஆளும் கட்சி வந்தே பாரத் ரயில் திட்டத்தை தேவையற்ற திட்டமாகவே அலட்சியப்படுத்தியது. அதன் ஆதரவாளர்கள் எல்லாம் ஒருவேளை உணவுக்கு வழியில்லாத மக்கள் பல கோடி இருக்க இத்தனை கோடி திட்டத்தில் இப்படி ஒரு ரயில் சேவை தேவைதானா ? என்று புத்திசாலித்தனமாக கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதே ரயில் போக்குவரத்தில் பிரிட்டிஷ் காலத்து ரயில் பாதை அரை நூற்றாண்டு கடந்த ரயில் பெட்டிகளில் பெரும் சிரமத்தோடு நீண்ட தூர பிரயானங்களை செய்யும் அதே சாமானிய மக்களை பற்றியோ அவர்களின் இடர்பாடுகளை பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை. ஆனால் வந்தே பாரத் ரயில் மட்டும் தேவையில்லாத திட்டமாகவே இருந்தது. இந்த ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து துவங்கி வைத்த போது தனிமனித வன்மமாக எவ்வளவு தாக்குதல்கள் ஊடகங்கள் சமூக ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்பட்டது? குறிப்பாக தாங்கள் ஒரு மக்கள் பிரதிநிதிகள் என்பதை கூட மறந்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தரம் தாழ்ந்த விமர்சனங்களை வந்தே பாரத் ரயிலை முன்வைத்து மோடி அரசை வசை பாடினார்கள்.

இன்னும் ஒரு சிலர் குஜராத்திற்கு எத்தனை வந்தே வரப் போகிறது? இதர வட மாநிலங்களுக்கு எத்தனை வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது? ஆனால் தமிழகத்திற்கு எத்தனை விடப்படுகிறது ? கணக்கு பார்த்து தங்களின் வழக்கமான வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற பிரிவினை அரசியலையும் பேசினார்கள். ஆனால் இப்படி ஒரு நவீனமான ரயில் சேவையோடு இந்திய ரயில்வே அடுத்த கட்டத்திற்கு நகர்வதையோ அந்தத் திட்டம் வெற்றிகரமாக மக்கள் சேவைக்கு வந்திருப்பதோ பாராட்டவோ வாழ்த்தவோ யாருமில்லை. இதை செய்த மத்திய ரயில்வே பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு வாழ்த்து நன்றியோ கூறவும் மனமில்லை. எத்தனையோ வெளிநாடுகளில் சதித்திட்டங்கள் வந்தே பாரத் ரயில் திட்டத்தை முடக்க வேண்டும் சீர்குலைக்க வேண்டும் என்ற எத்தனையோ சதிகளை கடந்து இதை வெற்றிகரமாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வர காரணமாக இருந்த மத்திய அரசிற்கோ இந்திய ரயில்வேவுக்கோ நன்றி கூறவும் வாழ்த்து கூறவும் இங்கு யாருக்கும் நேரமில்லை.

இந்த வந்தே பாரத் ரயிலில் கட்டணம் எவ்வளவு ? அதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு? அந்த ரயில் கட்டணம் ஜிஎஸ்டி உள்ளிட்டவை வித்தியாசம் எவ்வளவு? என்று திடீர் பொருளாதாரப் புலிகள் பலரும் அவதரித்தார்கள். ஆனால் இந்த ரயில் சேவை தாமாக முன்வந்து தமிழக மக்களுக்கு வழங்கும் மத்திய அரசின் சேவை என்பதை மறந்தும் கூட யாரும் எங்கும் குறிப்பிடவில்லை. இது எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்பட வேண்டும் எனில் உள்ளூரிலிருந்து செய்யப்பட வேண்டுவன எவை ? தவிர்க்கப்பட வேண்டியவை எவை? என்பதை பற்றிய ஆக்கபூர்வமான வழிகாட்டுதலோ விமர்சனங்களோ எந்த தரப்பிலும் இருந்து மத்திய அரசுக்கு முன்வைக்கப்படவில்லை. ஆனால் எப்படியாவது இந்த வந்தே பாரத் திட்டத்திற்கு எதிரான கருத்தை விதைக்க வேண்டும் .அதன் மூலம் மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு இல்லை என்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து மோடி அரசுக்கு அவப்பெயரை உருவாக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தார்கள்.

இன்று சென்னைக்கும் திருநெல்வேலிக்கும் இடையிலான வந்தே பாரத் ரயிலின் தொடர் பயன்பாடு புழக்கத்திற்கு வந்திருக்கிறது . அதன் முதல் ஏழு நாட்கள் டிக்கெட் முன்பதிவு முழுவதுமாக விற்று தீர்ந்து இருக்கிறது என்ற செய்திகள் வெளியாகிறது. அந்த வகையில் ஊடகங்கள் சமூக ஊடகங்கள் வழியாக பிரிவினைவாதிகளும் எதிர்க்கட்சி என்ற பெயரில் தேசத்தை அவமதிக்கும் விஷமிகளின் அவதூறு கருத்துக்களை எல்லாம் பின் தள்ளி பொதுமக்கள் மத்திய அரசின் வந்தே பாரத் ரயிலையும் அதன் மூலமான சேவையையும் தாமாக முன்வந்து அனுபவிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். நாம் இவ்வளவு தூரம் வெறுப்பு பிரச்சாரம் செய்தும் தமிழக மக்கள் மனதில் மிகுந்த நம்பிக்கையையும் வரவேற்பையும் பெற்ற வந்தே பாரத் ரயிலின் தாக்கம் பற்றிய புரிதல் தாமதமாக வந்தாலும் அதை உடனடியாக தங்களின் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் பலரும் இப்போது அப்படியே பல்டி அடித்து வருகிறார்கள். வந்தே பாரத் ரயில் சேவை இவ்வளவு விரைவாக தமிழகம் வருவதற்கு எங்களின் முயற்சிகளே காரணம் என்று ஒருவர் பதிவிடுகிறார்‌ சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை போகும் வந்தே பாரத் ரயில் கிடைப்பதற்கு எங்களின் கடந்த கால முயற்சிகளே காரணம். அது தென்மாவட்ட மக்களுக்காக நாங்கள் பெற்று தந்த திட்டம் என்று வெட்கமில்லாமல் ஒருவர் பதிவு செய்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த காலத்தில் சமூக ஊடகத்தில் இதே வந்தே வந்தே பாரத் ரயிலை மலிவாக விமர்சனம் செய்தவர் . இன்று அதே வந்தே பாரத் ரயில் தமிழகத்திற்கு அடுத்தடுத்து கிடைப்பதற்கு எங்களின் முயற்சியே காரணம் என்று பெருமை பேசுகிறார்.

நேற்று வரை வேண்டாத மருமகளாக இருந்த வந்தே பாரத் ரயில் இன்று மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள தொடங்கியதால் வேறு வழி இன்றி அவர்களும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் மத்திய அரசு எந்த நல திட்டத்தை வளர்ச்சி பணியை கொண்டு வந்தாலும் அதில் தங்களின் ஸ்டிக்கரை ஒட்டி தற்பெருமை தேடிக் கொள்ளும் வழக்கமான பித்தலாட்ட அரசியலை முன்னெடுக்கிறார்கள். கல்யாண வீடாக இருந்தால் நாம் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். துக்க வீடாக இருந்தால் நாம் தான் சவமாகவும் இருக்க வேண்டும். எங்கும் எப்போதும் தமக்கு மட்டுமே முதல் மரியாதை விளம்பரமும் தற்பெருமையும் பிரதானமாக இருக்க வேண்டும் என்ற மலிபான தமிழக அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை பல விதங்களில் வந்தே பாரத் ரயில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

கடந்த காலங்களில் வந்தே பாரத் ரயில் கட்டணம் பணக்காரர்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் இருக்கிறது ஏழைகள் பயணிக்க முடியாது மோடி அரசு மேல் தட்டு மக்களுக்கான அரசு சாமானிய மக்களை வஞ்சிக்கிறது என்று தூற்றியவர்கள் இன்று எங்களின் முயற்சியால் தான் வந்தே பாரத் ரயில் கிடைத்தது என்று வெட்கமின்றி பெருமை தேடுகிறார்கள். ஆனால் எப்படி எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அவதூறு பிரச்சாரங்கள் அனைத்தும் கடந்து மத்திய அரசு மக்களின் நலமும் தேசத்தின் பாதுகாப்பும் வளர்ச்சியுமே பிரதானம் என்று தன் வழியில் பயணிக்கிறதோ? அதே வழியில் மத்திய அரசின் ரயில்வே துறையும் வந்தே பாரத் ரயிலும் கூட என் கடன் பொதுமக்களின் நீண்ட தூர பிரயாணத்தை இலகுவாக மகிழ்ச்சியாக மாற்றிக் கொடுப்பதே என்று அனைவரையும் கடந்து போகிறது.நீங்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினாலும் கைதட்டி வரவேற்றாலும் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்கள் அனைவரையும் பத்திரமாக பிரயாணம் செய்விப்பதே என் இலக்கு என்று வந்தே பாரத் அதன் இயல்பில் பயணிக்கிறது.


Share it if you like it