முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை எச்சரித்த வி.சி.க மூத்த தலைவர் வன்னியரசு.
தி.மு.க மூத்த தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படும் சவுக்கு சங்கர் சமீபத்தில் காவல்துறை உயர் அதிகாரியை அவமதித்து டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். அதனை தொடர்ந்து வி.சி.க கட்சியின் மூத்த தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான வன்னியரசு அவர்கள் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டுவிட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
வன்னியரசு டுவிட்டர் பதிவு.
விடுதலைச்சிறுத்தைகள் கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ’அம்பேத்கர் சுடர்’ விருதினை சமீபத்தில் திருமாவளவன் வழங்கி இருந்தார். திருமா சொல்லுக்கு நான் கட்டுப்பட்டவன்’ என்று முதல்வர் அந்த மேடையிலேயே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இது போன்று வன்னியரசு பதிவு செய்வது தி.மு.க கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
