காவல்துறையை மீண்டும் அவமதித்த கனிமொழி ஆதரவாளர் சவுக்கு சங்கருக்கு குவியும் கண்டனம்.
வி.சி.க கட்யின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருமாவளன் போன்று, ஹிந்து மதம், ஹிந்துக்களை மட்டுமே, குறி வைத்து மிகவும் கீழ்த்தரமாகவும், அருவக்கதக்க, வகையிலும் பேச கூடியவருமான வன்னியரசு, சமீபத்தில் தமிழக காவல்துறைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு.
வன்னியரசு பதிவு.
கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச்சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், கனிமொழியின் தீவிர, ஆதரவாளருமான சவுக்கு சங்கர். பாரதப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க பெண் நிர்வாகிகள், என தனக்கு பிடிக்காதவர்கள் மீது, தனது வன்மத்தை தொடர்ந்து, வெளிப்படுத்த கூடிய நபர் இவர் என்பது அனைவரின் குற்றச்சாட்டு. சில மாதங்களுக்கு முன்பு, தமிழக காவல்துறை அதிகாரியை, மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு குறித்தும், அவர் நடத்திய என்கவுண்டர் குறித்தும், சவுக்கு சங்கர் பேசிய காணொளி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேசியவாதிகள் கருத்து தெரிவித்தால் உடனே, கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் தமிழக அரசு. காவல்துறையை தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் வன்னியரசு, சவுக்கு சங்கர், போன்றவர்கள் மீது எப்பொழுது தான் நடவடிக்கை? எடுக்கும் என்று மக்கள் குரல் ஒலிக்க துவங்கியுள்ளது. முரசொலிக்கு சந்தா கட்டி வரும் சொற்பமான சிலரில் ஒருவரான வன்னியரசை கைது செய்து சிறையில் அடைக்க தி.மு.க அரசுக்கு மனம் வருமா? என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.