உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான சிவராத்திரி விழாவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஹிந்து ஆலயங்கள் சென்று வழிபடுவது. வெற்றி பெற்ற பிறகு ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி. அதன் மூலம் கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினையை தூண்டும் சக்திகளிடம் ஆதாயம் பெற்று அதன் மூலம் கட்சி நடத்தி வருவதாக விடுதலை சிறுத்தைகள் மீது இன்று வரை கடுமையான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில், வி.சி.க-வின் மூத்த தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான வன்னியரசு மீண்டும் ஹிந்துக்களை சீண்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
காவல் தெய்வமாகவும், எல்லைச்சாமியாகவும், தமிழக கிராம மக்களால் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் காவல் தெய்வத்தின் சன்னதியில் காலணி அணிந்து கொண்டு அண்மையில் போஸ் கொடுத்த சம்பவத்திற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்து மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான சிவராத்திரி விழா குறித்து இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மார்ச்-1 அன்று மயிலாப்பூர் கோவிலில் மகா சிவராத்திரி ஒன்றை நடத்தப்போவதாக அமைச்சர் சகேர் பாபு அறிவித்துள்ள அறிவிப்பு ஆபத்தானதாகும். ஆன்மீகப்பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும். தமிழ்நாடு முதல்வர் இச்செயல் திட்டத்துக்கு அனுமதிக்க கூடாது என்று பதிவிட்டுள்ளார்.