பணம் கேட்டு மிரட்டி சரமாரி தாக்கிய சிறுத்தைகள் : நையப்புடைத்த காவல்துறை !

பணம் கேட்டு மிரட்டி சரமாரி தாக்கிய சிறுத்தைகள் : நையப்புடைத்த காவல்துறை !

Share it if you like it

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பால கிருஷ்ணன் என்பவர் ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை பால கிருஷ்ணன் மகன் சௌந்தர்யான் மற்றும் மருமகன் மோகன் ஆகியோர் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி பால கிருஷ்ணன் அவர்களின் நிறுவனத்திற்கு சிலர் சென்றுள்ளனர். அவர்கள் தங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் என அறிமுகப்படுத்தி கொண்டு அமர்ந்து பேசியுள்ளனர். இந்நிலையில் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு நிறுவன உரிமையாளரும் சரி கோவிலுக்கு தானே தருகிறோம் என்று நினைத்து இரண்டாயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். ஆனால் விசிகவினரோ இரண்டாயிரம் எல்லாம் பத்தாது, 50 ஆயிரம் கொடு என்று மிரட்டும் தொனியில் கேட்டுள்ளனர். அதற்கு தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர் நிறுவன உரிமையாளரை அவரது சட்டையை பிடித்து கும்பலாக சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து சாலை வரையில் இழுத்து சென்று தாக்கியுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு வந்ததால் அங்கிருந்து விசிகவினர் ஓட்டம் பிடித்துள்ளனர். காயமடைந்த மோகன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் நிறுவன உரிமையாளர் பால கிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நிறுவனத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவியை ஆய்வு செய்துள்ளனர். அதில் கருப்பூரை சேர்ந்த கனகராஜ், பூமிநாதன் உள்ளிட்ட 9 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 7 பேர் தலைமறைவான நிலையில் கனகராஜ், பூமிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Share it if you like it