2026-ல் திருமாவளவன்தான் முதல்வர்… இதனை யாராலும் தடுக்க முடியாது: – வி.சி.க. நிர்வாகி அதிரடி பேட்டி!

2026-ல் திருமாவளவன்தான் முதல்வர்… இதனை யாராலும் தடுக்க முடியாது: – வி.சி.க. நிர்வாகி அதிரடி பேட்டி!

Share it if you like it

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் 2026-ல் நாங்கள்தான் ஆட்சியில் இருப்போம் என பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி விடுதலைச் சிறுதைக்கள். இக்கட்சியின், மூத்த தலைவரும் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருப்பவர் சங்கத்தமிழன். இவர், ழகரம் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 2026-ல் திருமாவளவன் தமிழக முதல்வராக இருப்பார் என கூறினார். அப்படியெனில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேற போகிறதா? என நெறியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு, தேவையில்லாத கேள்வியினை கேட்காதீர்கள் என நெறியாளரிடம் வி.சி.க. நிர்வாகி பாய்ந்து இருக்கிறார். இந்த காணொளிதான், தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.


Share it if you like it