நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு என்று தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் மிகப்பெரிய குழப்பவாதி திருமாவின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ளார். தேர்தலில் வெற்றி பெறும் வரை ஹிந்து ஆலயங்களுக்கு செல்வார். வெற்றி பெற்ற பின்பு தமக்கு வாக்களித்த ஹிந்துக்களை காயப்படுத்துவார். இப்படியாக, இவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதற்கு ஏற்ப திருமாவின் நிலைப்பாடுகள் இருக்கும். நான், ஒரு ஹிந்து அம்மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று கூறுவார். நான் ஒரு கிறிஸ்தவன், அந்த மதத்தை பின்பற்றுகிறேன் என்று கூறுவார். அப்படி ஒரு உருட்டு, இப்படி ஒரு உருட்டு, என திருமாவின் பேச்சு அமைந்து இருக்கும்.
பட்டியல் சமூகத்தின் ஒட்டு மொத்த தலைவர் தாம்தான் என்பது போல பேசுவார். ஆனால், அதே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் விடியல் ஆட்சியில் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து வாய் திறக்க மாட்டார் என்பதே நிதர்சனம். தாம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், அப்பாவி இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி விடும் வகையில் இவரது கருத்துக்கள் அமைந்து இருக்கும்.
இதனிடையே, திருமாவின் மணிவிழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்ட போது, ராஜ ராஜ சோழனை ஹிந்து மன்னராக காட்ட முயற்சி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார். இவரின், கருத்து பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது. ராஜ ராஜ சோழன் காலத்தில் ஹிந்து என்ற மதமே இல்லை. அவர், ஒரு ஹிந்து மன்னர் அல்ல என்று பதிலுக்கு திருமாவளவன் தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், நெறியாளர் செந்திலுடன் நடைபெற்ற நேர்காணலில் திருமாவளவன் இவ்வாறு பேசியிருக்கிறார் ; ஒரு ஹிந்துவாக, தன்னை உணர கூடியவன் தன்னை தமிழனாகவும் உணரலாம். அப்படிதான், அவன் தன்னை உணர வேண்டும். அதில், தவறு ஏதுமில்லை. தன்னை தமிழனாக உணர கூடியவன் தம்மை ஹிந்து என்று அறிவித்து கொள்வதில் தவறில்லை. அது அவனுடைய நம்பிக்கையை பொறுத்தது. தமிழன் ஹிந்துவாக இருக்க கூடாது. ஹிந்து மதத்தை பின்பற்ற கூடாது என்று எல்லாம் நான் சொல்லவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.