மோடியை கொல்வோம்… அயோத்தியை தகர்ப்போம்… பி.எஃப்.ஐ. மிரட்டல் கடிதம்!

மோடியை கொல்வோம்… அயோத்தியை தகர்ப்போம்… பி.எஃப்.ஐ. மிரட்டல் கடிதம்!

Share it if you like it

பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை கொல்வதோடு, அயோத்தி, மதுரா போன்ற கோயில்களையும் தகர்ப்போம் என்று, தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பு, பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தென் மாநிலங்களில் இயங்கி வந்த முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் இணைந்து, 2006-ம் ஆண்டு பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா (பி.எஃப்.ஐ.) என்கிற அமைப்பை உருவாக்கின. அப்போது, முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டுக்கு எதிரான இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது, இந்தியாவை முஸ்லிம் நாடாக்குவதற்காக பல்வேறு இஸ்லாமிய நாடுகளிடமிருந்து நிதி திரட்டி, பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்குவது, முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத பயிற்சி அளித்து பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவது, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நாட்டுக்கு எதிராக சதி செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பு பி.எஃப்.ஐ. அமைப்பை தீவிரமாக கண்காணித்து வந்தது. மேலும், அவ்வப்போது சில சோதனைகளை மேற்கொண்டு பி.எஃப்.ஐ. அமைப்பினர் சிலரை கைது செய்தது. இந்த சூழலில், கடந்த மாதம் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ. அமைப்பினருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அமைப்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இதில், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு நாடு முழுவதும் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு. மேலும், பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய 8 கிளை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பி.எஃப்.ஐ. அமைப்பின் அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு வருவதோடு, அவ்வமைப்பின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான், பி.எஃப்.ஐ. அமைப்பினரிடமிருந்து தனது மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக, மஹாராஷ்டிரா மாநிலம் சோலாபூரைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜயகுமார் தேஷ்முக், போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில், “தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் நிர்வாகி முகமது ஷாபி பிராஜ்தார் எனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்கிறார். அக்கடிதத்தில், பி.எஃப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில், மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில் உள்ளிட்ட முக்கியக் கோயில்களை தகர்க்கப் போவதாகவும், என்னை தலையை துண்டித்து கொல்லப் போவதாகவும் முகமது ஷாபி பிராஜ்தார் மிரட்டல் விடுத்திருக்கிறார். ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதுதான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it