கூட்டணி கட்சிகளை நம்பி தி.மு.க.  இல்லை… அமைச்சர் பேச்சால் சலசலப்பு!

கூட்டணி கட்சிகளை நம்பி தி.மு.க. இல்லை… அமைச்சர் பேச்சால் சலசலப்பு!

Share it if you like it

அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்தால் கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர், பதவி ஏற்றுக் கொண்ட பின்பு கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்கபடவில்லை என்று சொல்லப்படுகிறது. கூட்டாக கிடைத்த வெற்றியை தி.மு.க. மட்டுமே ருசித்து வருவது சரியா? எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குமுறி இருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தான், தி.மு.க.வின் 15 -வது பொதுத் தேர்தலையொட்டி நேற்றைய தினம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. என ஏராளமான முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, தி.மு.க.வின் மூத்த தலைவரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, நேரத்தை துளியும் வீணடிக்காமல், முதல்வர் ஸ்டாலின் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார். அந்த தலைவரை பார்க்கும் போது எல்லாருக்கும் ஒரு உற்சாகம் வந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நினைக்கிறது. எல்லா கட்சியும், ஒன்றாக சேர்ந்தாலும், தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயார் என்று கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த கருத்து தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it