சிங்கத்திடம் பதுங்கிய சீட்டாஸ்!

சிங்கத்திடம் பதுங்கிய சீட்டாஸ்!

Share it if you like it

பா.ஜ.க அலுவலகத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என வி.சி.க தலைவர் ட்டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ப்ளூ கிராஃப் பவுன்டேசன் என்கிற நிறுவனம், ‘அம்பேத்கரும் மோடியும்: சிந்தனைவாதியும் செயல் நாயகனும்’ என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டது. இப்புத்தகத்துக்கு, இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், முத்தலாக், பெண்கள் முன்னேற்றம் உட்பட மோடியின் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி அம்பேத்கருக்கு இணையானவர் மோடி என்று குறிப்பிட்டிருந்தார். இசைஞானியின் இந்த கருத்து தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க. கட்சியை சேர்ந்தவர்கள் இளைய ராஜாவை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர்.

இளையராஜா பாவம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை சந்தித்து இருப்பார்கள் என நினைக்கிறேன் என வி.சி.க தலைவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேரடி விவாதத்திற்கு வருமாறு திருமாவிற்கு சவால் விடுத்திருந்தார். அந்த வகையில், அண்ணாமலை ஒரு சப் ஜூனியர் அவருடன் விவாதம் நடத்த எனது கட்சியின் சார்பில் ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறேன் என திருமா கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, இரு தலைவர்களிடமும் வார்த்தை போர் தொடங்கியது.

சமூக வலைத்தளங்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மற்றும் இரு கட்சியை சேர்ந்த தொண்டர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன், பா.ஜ.க தலைவருக்கு போன் செய்து விவாதத்திற்கு நான் தயார் எப்பொழுது கமலாலயம் வரட்டும் என தேதி கேட்டு இருந்தார். பதிலுக்கு அண்ணாமலை 26-ம் ஆம் தேதி வாருங்கள் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், திருமாவளவனின் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமா பதிவு இதோ ; பாஜக தமிழகத் தலைவருக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அவர்களிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும்.


Share it if you like it