நாட்டில் பிரிவினைவாதம், வகுப்புவாதம், வெறுப்புப் பேச்சுக்களை பேசிவரும் திருமாவளவனை விமர்சித்து வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி உட்பட பலரும் மிரட்டும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடுமையான மத துவேசத்தில் ஈடுபட்டு வருகிறார். தான் கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டதாகவும், இஸ்லாத்தை தழுவி விட்டதாகவும், பௌத்த மதத்தை தழுவி விட்டதாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூறிவரும் திருமாவளவன், ஹிந்து மதத்தை மிகவும் இழிவாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்து வருகிறார். குறிப்பாக, கூம்பு வடிவில் இருந்தால் இஸ்லாமிய மசூதி, நீண்ட கோபுரமாக இருந்தால் கிறிஸ்தவ சர்ச், அதே அசிங்க அசிங்கமான பொம்மைகள் இருந்தால், அது ஹிந்து கோயில் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் பேசியதை, யாரும் மறந்திருக்க முடியாது.
தவிர, அடங்கமறு, அத்துமீறு என்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை உசுப்பி விட்டார். அதோடு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்தில் அடிமைகளைப் போல நடத்தப்படுவதாகவும், ஆகவே, அச்சமூகத்தினர் கிறிஸ்தவ மதத்தையோ, பௌத்த மதத்தையோ தழுவ வேண்டும் என்கிற ரீதியில் தற்போது பேசிவருகிறார். மேலும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை படிக்கச் சொல்லாமல், 10 கேஸ் வாங்கினால்தான் கவுரம் என்று உசுப்பேற்றினார். எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் பேசியபோது தனித் தமிழ்நாடு வேண்டும் என்று பேசினார். இதுபோன்ற இவரது பேச்சுக்கள், அவரது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியிலேயே வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், திருமாவளவனை கண்டித்து வீடியோ ஒன்றை வெளிட்டிருந்தார். அந்த வீடியோவில், “தனித் தமிழ்நாடு கேட்கும் திருமாவளனுக்கு எனது கேள்வி இதுதான்! தமிழகத்தில் தனியாக நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றிபெற முடியுமா? ஒரு நாடு மாதிரி தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள். இதற்குதான் நாங்கள் இந்திய ஒருமைப்பாட்டையும், தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்தோமா? நாட்டை இரண்டாகவும், மூன்றாகவும் பிளக்கத்தானா? இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கத்தான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறோமே தவிர, நாட்டை பிரித்துப் பார்க்க அல்ல.
உன் சுயநலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பாய். அதன் பிறகு, மாவட்டத்தைப் பிரித்து கொடு என்று கேட்பாய். என்ன தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என்று கேட்கிறாய். உன்னை இவ்வளவு தூரம் பேச வைத்தது ஆட்சியாளர்களின் தவறு. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீங்களா? நாட்டுப் பற்றை வளர்க்க போராடிக் கொண்டு இருக்கும் நாங்கள் என்ன இழிச்சவாயன்களா? நீ ஆம்பளையா இருந்தா, ஒரு நாள் வீதியில் நின்று தனித் தமிழ்நாடு வேண்டும் என்று போராடி பாரு. உன் வாயாலேயே வந்த மாதரம் என்று சொல்ல வைப்போம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், மேற்கண்ட ராணுவ வீரரை மிரட்டி இருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள். அக்கட்சியின் கடலூர் மாவட்டம் லத்தூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர், மேற்கண்ட ராணுவ வீரருக்கு போன் செய்து, எப்படி திருமாவளவனை இப்படிப் பேசலாம். மரியாதையாக மன்னிப்புக் கேள் என்று கூறுகிறார். அதற்கு அந்த ராணுவ வீரரோ, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான்காரன் துப்பாக்கியும், பீரங்கியையும் தூக்கிக் காட்டினாலே பயப்படமாட்டோம். நீங்க என்னன்னா போன் போட்டு என்னை மிரட்டுகிறீர்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்கிறார். உடனே, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டும் மணிமாறன், நீ டெல்லியிலதான் இருப்ப. ஆனா, உங்க அப்பா, அம்மா, தம்பி எல்லாம் இங்கதானே இருக்காங்க. அவங்க உயிரோட இருக்கணுமா வேணாமா என்று மிரட்டல் விடுக்கிறார். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலரும், மேற்கண்ட ராணுவ வீரரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி, மிரட்டுகிறார்கள்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், தமிழ்நாட்டில் ஒரு ராணுவ வீரருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதை நினைத்து வேதனைப்படுகின்றனர். மேலும், ராணுவ வீரரை மிரட்டிய மணிமாறனை உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ராணுவ வீரரை மிரட்டும் மணிமாறன் வேறு யாருமல்ல, செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் தனியார் பள்ளியில் பணிபுரிந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டு, போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட புரட்சிமாறன் என்கிற மணிமாறன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.