எங்க போச்சு உன் மிடுக்கு?எல்.முருகன் காட்டம்!

எங்க போச்சு உன் மிடுக்கு?எல்.முருகன் காட்டம்!

Share it if you like it

வி.சி.க தலைவர் திருமாவளவனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வறுத்தெடுத்த காணொளிதான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோடி அரசின் எட்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பச்சையப்பா கல்லூரி அருகே நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்தவகையில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக இருக்கும் டாக்டர் எல்.முருகன் கலந்துக் கொண்டார். இதையடுத்து, அவர் பேசியதாவது;

நாம் மிடுக்காக இருக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவார். ஏன்? அதே, மிடுக்கோடு சென்று அறிவாலயத்தில் உட்கார்ந்து. முதல்வர் ஸ்டாலினிடம் ஏன்? என்னுடைய சகோதரனை பின்னால் உட்கார வைத்து இருக்கிறாய். என் சகோதரனுக்கு நிதித்துறையை கொடு, பொதுப்பணித்துறையை கொடு என்று கேட்க வேண்டியது தானே எங்கே போய்ச்சி உன் மிடுக்கு என காட்டமாக பேசியிருக்கிறார். இக்காணொளி, தற்பொழுது வைரலாகி வருகிறது.


Share it if you like it