வி.சி.க- தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளர் என்று அனைவராலும் அழைக்கப்படும் திருமாவளன் அவர்கள் பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, பா.ஜ.க, ஹிந்து மதம், மற்றும் பிராமணர்கள், மீது தொடர்ந்து தனது வன்மத்தை வெளிப்படுத்தி. அப்பாவி பட்டியல் சமூக இளைஞர்களுக்கு தவறான பாதையை காட்டி வரும் தலைவராக திருமாவளவன் உள்ளார் என்பது யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
நீட் தேர்விற்கு எதிர்ப்பு, 370-வது சட்ட பிரிவுக்கு எதிர்ப்பு, தற்பொழுது ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு என தொடர்ந்து எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் தொடர்ந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதையே வாடிக்கையாக கொண்ட திருமா அவர்கள் ஜிஎஸ்டி பற்றி பிரபல ஊடகமான தந்தி டிவியில் அண்மையில் இவர் அளித்த பேட்டியின் மூலம் இவரின் அறிவு திறனை மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
இச்சூழ்நிலையில் GST பற்றி எந்த புரிதலும் இல்லாமல் பேட்டியளிக்க முன் வந்த திருமா அவர்கள் ரிசர்வேஷன் குறித்து மாணவர்களுக்கு தவறாக பாடம் நடத்திய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.