பா.ஜ.க தமிழகத்தை ஒருபோதும் ஆள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தெரிவித்து இருந்த கருத்திற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி வரவேற்று உள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த 700 மீனவர்கள் சுட்டு கொலை. லட்ச கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்கள் படுகொலை. தமிழகத்திற்கு உள்ள நற்பெயரை 2ஜி ஊழல் மூலம் ஒட்டு மொத்த தமிழர்களையும் தலை குனிய வைத்தது என ஏராளமான தீமைகளை செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி. பா.ஜ.க ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று நேற்றைய தினம் மக்களவையில் கூறியிருந்தார்.
தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும், அநீதி இழைத்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்த கருத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உடனே தக்க பதிலடியை வழங்கி இருந்தார்.

பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும், காங்கிரஸ் கட்சி செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து விட்டு, மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்திற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி, வாழ்த்து தெரிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்டது. தமிழக மக்களை அவமதிக்கும் செயல் இது என்று நெட்டிசன்கள் வீரமணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

