விவேக் இறப்பிலும் ஜாதியை தேடிய வீரமணி..!

விவேக் இறப்பிலும் ஜாதியை தேடிய வீரமணி..!

Share it if you like it

திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணியின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கம் என்று கூறப்படும் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.

  •  சிறந்த நகைச்சுவை நடிகரும், சீரிய சமூகப் பற்றாளருமான நண்பர் #விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17.4.2021) அதிகாலை உயிரிழந்தார் என்று பேரதிர்ச்சியான செய்தி நம்மை பெரும் வருத்தத்துக்கு ஆளாக்குகிறது
  • பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அரசுப் பணியில் இருந்தபடி கலைத் துறையில் நுழைந்து, பின்னர் திரைத் துறையில் பெரு வெற்றி பெற்ற நடிகர் விவேக் அவர்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளைத் தன் படங்களில் வெளிப்படுத்தி, அதையே தன் அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர்.
  • குறிப்பாக ‘திருநெல்வேலி’ திரைப்படத்தில் தொடங்கி பல படங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி, நம்மால் ‘பெரியார்விருது’ வழங்கிப் பாராட்டப்பெற்றவர். திரைத்துறையில் மட்டுமல்லாமல், தன் வாழ்விலும் பொதுப்பணிகளில் ஈடுபட்டு, சமூகச்செயல்பாட்டாளராகத் திகழ்ந்தவர்
  • சுற்றுச்சூழல் காக்க மரக் கன்றுகள் நடுதலை பேரியக்கமாக நடத்தியவர். பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சமூக அக்கறையுடன் உரையாற்றி, இளைஞர்களுக்கு ஊக்கமூட்டியவர்; விழிப்புணர்வூட்டியவர். உலகத் தமிழர்களால் விரும்பப்பட்டவர்.
  • 59 ஆண்டுக்குள் அவருடைய மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத் துறையினருக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் விவேக்கின் மறைவிற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைவரும் தனது இரங்கலையும், அவரின் புகழையும், நினைவு கூர்ந்து வரும் நிலையில். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்று வீரமணி குறிப்பிட்டு பேச வேண்டிய காரணம் என்ன?

அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்று தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏன்? வந்தது. இது தான் வீரமணியின் புத்தி, இது தான் தி.க, தி.மு.க.,வினரின் புத்தி என்று அவரின் ரசிகர்கள் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Share it if you like it