வேங்கைவயல் விசாரணை : 8 வாரத்தில் முடிக்க உத்தரவு !

வேங்கைவயல் விசாரணை : 8 வாரத்தில் முடிக்க உத்தரவு !

Share it if you like it

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ராஜ்கமல் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து 2023 மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, நீதிபதி சத்யநாராயணன் ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையை மூடி முத்தரையிட்ட உறையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்ற வழக்கின் விசாரணை இன்னும் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது விசாரணையை முடிக்க 8 வார கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று அவகாசம் வழங்கிய நீதிமன்றம், வழக்கின் விசாரணையை முடித்து, ஏப்ரல் 16ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


Share it if you like it