ஸ்ரீ ஸ்தாணுமாலையன் ஜி அகில பாரத இணை பொதுச்செயலாளர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பத்திரிகை செய்தி.
பொருள் : பாராளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த துறவியர்களை கௌரவிக்கும் விதமாகவும் & கோவில்கள் மடங்கள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றல் சம்மந்தமாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் பேரியக்கம் ஆதினங்கள் மடாதிபதிகள் துறவியர்கள் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அற வழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் துறவியர் சங்கமம் ஜூன் 14 ஆம் தேதி 2023 இன்று திருச்சி திருவானைக்காவலில் நடைபெற்றது.
கோபூஜை மற்றும் திருமுறை விண்ணப்பம் திவ்யப்பரபந்த பாராயணம் வேத கோஷங்களுடன் ஆரம்பம் ஆனது. வரவேற்புரையாக ஸ்ரீ சுதாகர் எம்.ஏ. அமைப்பாளர் மார்க்க தர்ஷக் மண்டல் நிகழ்த்தினார்கள், அறிமுக உரையாக ஸ்ரீ PM. நாகராஜன் அகில பாரத இணைச் செயலாளர் அவர்களும் ஸ்ரீ கேசவராஜு தென்பாரத அமைப்பாளர் அவர்களும் தலைமை உரையா ஸ்ரீ ஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள் வாகீசர் மடாலயம் அவிநாசி ஆதினம் அவர்களும் சிறப்புரையாக ஸ்ரீ ஸ்ரீ சீரவை ஆதினம் சிர்வளர்ச்சீர் ராமாநந்த குமரகுருபர ஸ்வாமிகள் கௌமார மடாலயம் கோவை அவர்களும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் 24 வது மடம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்களும் ஸ்ரீ ஸ்ரீ நியமானந்தா சுவாமிகள் உதவி தலைவர் ஸ்ரீராகிருஷ்ண தபோவனம் திருப்பராய்துறை அவர்களும் நிறைவுரையாக ஸ்ரீ கோ ஸ்தானுமாலையன் அகில பாரத இணை பொதுச்செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை ஸ்ரீ வேதாந்தாநந்த ஸ்வாமிகள் தத்வஞான சபை பொள்ளாசி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
பாராளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொண்டு நமது பாரம்பரியத்தில் சிறப்புமிக்க செங்கோல் வழங்கிய துறவியர்களை கெளரமிக்கும் விதமாகவும் இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆதீனங்கள், ஜீவர்கள் ஆன்மீக பெரியோர்கள் துறவியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோவில்கள், மடங்கள் பற்றிய முக்கிய நீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மற்றும் வருங்கால நிகழ்ச்சிகளை பற்றிய திட்டமிடல் நடைபெற்றது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துறவியர்கள் மற்றும் திரு கோ ஸ்தாணுமாலயன், அகில பாரத இணை பொதுச் செயலாளர் அவர்களும், தென்தமிழக மாநில தலைவர் வழக்கறிஞர் வி.கதிர்வேலு மற்றும் வட தமிழக மாநில தலைவர் திரு ஆண்டாள் பி சொக்கலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி எற்பாடுகளை திருச்சி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் செய்திருந்தனர்.
தேசப் பணியில்
ஸ்ரீ ஸ்தாணுமாலையன்