சட்ட விரோத மதமாற்றங்களை தடுக்க நாடு முழுவதும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடிவு உள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் அலோக் குமார் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அலோக் குமார் கூறியதாவது.
பொருள் : சட்டவிரோத மதமாற்றத்தை எதிர்த்து மாபெரும் பிரச்சாரம்
கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் முல்லா மெளல்விகள் சட்டவிரோத மதமாற்றங்கள் மூலம் பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தையும் மக்கள் தொகையும் குறைப்பதால் விசுவ ஹிந்து பரிஷத் தர்ம ரக் ஷா அபியான் டிசம்பர் 20 முதல் 31,2021 வரை பாரதம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறது. இதுவரை சுவாமி சிரதானந்தர் பலிதானம் ஆன நாளான டிசம்பர் 23 அன்று தர்ம ரக்ஷா தினமாக அனுசரிக்கப்பட்டது ஆனால் தற்போதைய சட்டவிரோத மதமாற்றங்கள் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த ஆண்டு பரவலாக தீவிரமாக மதவாதிகளின் சதிகளை அம்பலப்படுத்தும் விதமாக பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு.
கொரோனா தொற்றுடன் நாடு போராடிக் கொண்டிருந்த போது பல சமூக அமைப்புகள் சேவைகளை செய்தன, ஆனால் இந்த சட்ட விரோத மெளல்விகள் & மிஷினரிகள் பாதிக்கப்பட்ட மக்களை மதம் மாற்றினர். கொரோனாவை குணப்படுத்தும் கூட்டங்கள் என பொய்யான வாக்குறுதிகளை கூறி. திருச்சபைகள் என்ற பெயரில் வெளிப்படையாக சட்டவிரோத மதமாற்றங்களை இன்று வரை செய்து வருகிறது. இதில் அப்பாவி பழங்குடியின சகோதரர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு புறம் ஜிகாதிகள் நன்கு திட்டமிட்டு தேச விரோத செயல்கள் மற்றும் லவ் ஜிகாத் தொடர்பான ஹிந்து பெண்களை சித்திரவதை செய்வதும் அல்லது கொலை செய்வதும் நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் நடக்கும் செய்தியாக வருகிறது. இது தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆக்கிரமிப்பு என தெளிவாக தெரிகிறது. இவர்கள் உணவு அல்லது உணவுப் பொருட்கள் மீது எச்சில் துப்புவதும் ஹிந்துக்கள் மீதான அவர்களின் வெறுப்பை பறைசாற்றி வருகிறது.
இதன் மூலம் இவர்களின் சட்டவிரோத மதம் மாற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டமைப்பில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களால் பாரதம் பிரிவினைவாதிகள் மூலம் இந்துக்கள் படுகொலை மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படும் கலவரங்கள் என ஹிந்து சமுதாயம் வேதனை அடைந்து உள்ளது
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சகோதரர்களின் வளர்ச்சிக்காக பாரத்தில் அரசியலமைப்பில் சில சலுகைகள் செய்யப்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் பட்டியலிடப்பட்ட பழங்குடியின சகோதரர்களை மதமாற்றம் செய்யப்பட்ட பிறகு அரசியல் அமைப்பை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர மிஷனரிகள் தீவிர முயற்சி மேற்கொள்கின்றனர். வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் பூர்வ குடி மக்கள் கிட்டத்தட்ட 100 சதவீத பழங்குடியினர் இவர்களின் மதமாற்ற சதிகளுக்கு இரையாகி அழிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் நிலங்கள் மற்றும் பிற சொத்துக்களை இழந்துள்ளனர்.
சமீப நாட்களில் சட்டவிரோத மத மாற்றங்களை நடத்துவதற்காக பாரதத்தின் பழங்குடியின மக்கள் உள்ளே பிளவுகள் உருவாக்க தேவாலயங்களை கோவில் என்று அழைப்பதும் இயேசுவை கிருஷ்ணர் என்று காட்டுவதும் புதிய ஏமாற்று சதிகள் தேவாலயங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹிந்து சமுதாயத்தையும் நாட்டையும் அவதூறு செய்யும் இவர்களின் செயல் அவ்வப்போது அம்பலமாகி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்ச்சிகள் மற்றும் தவறான செயல்களால் சலித்துப்போய், பாரதத்திலும் உலகிலும் இஸ்லாம், கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பலர் இப்போது சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் ஜிகாதிசத்தால் ஏமாற்றம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அவர்கள் தங்களை முன்னாள் முஸ்லிம்கள் மற்றும் முன்னாள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.
பாரதத்தில் மதமாற்றம் மோசடியாலும், வசீகரத்தாலும், செய்யப்படுகிறது, எனவே ஹிந்துக்கள் மத மாற்றத்தைத் தடுத்து மதம்மாறிய சகோதர சகோதரிகளை மீண்டும் தங்கள் பூர்வீக இடத்திற்கு கொண்டு வர எப்போதும் முயன்று வருகின்றனர். இதில் தேவல் ரிஷி, ஸ்வாமி வித்யாரண்யா, ராமானுஜாச்சாரியார், ராமானந்தா சுவாமிகள்,சைதன்ய மஹாபிரபு சுவாமிகள், சுவாமி தயானந்த், ஸ்வாமி சிரதானந்தர் போன்றோர் செய்த இடைவிடாத முயற்சிகள் மூலம் தாய் வீட்டுக்கு திரும்பும் நிகழ்வு இன்றும் நடந்து வருகிறது.
இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது, சமூகத்தில் ஹிந்து சமுதாயத்தை அதன் பூர்வீக தன்மைக்கு ஏற்ப தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்வை வடிவமைக்க அழைக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத். சட்டவிரோத மதவாதிகளின் சதியில் சிக்கி எத்தனையோ உயிர்கள் சீரழிந்து உள்ளன. இதனால் நமது நாட்டிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தேசவிரோத சதிகளுக்கு மத்தியில் மாநில அரசுகளும், மத்திய அரசும் தங்களின் அரசியலமைப்பு சட்ட கடமைகளில் இருந்து விலகி இருக்க முடியாது,
எனவே விஷ்வ ஹிந்து பரிஷத் கீழ்க்கண்ட கோரிக்கைகளை விடுக்கிறது:
- சட்டவிரோத மதமாற்றம் லவ் ஜிகாத் போன்றவைகளை தடுக்க வலுவான சட்டங்கள் இல்லாத மாநிலங்களில் பாரததேசத்தின் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக சட்டங்களை இயற்ற வேண்டும்.
- சட்ட விரோத மதமாற்றத்தின் மூலம் பாரதம் முழுவதும் பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பை கண்காணித்து அவர்களை தடுக்க மத்திய அரசு வலுவான சட்டத்தை விரைவில் கொண்டு வர வேண்டும்.
- பூர்வீக ஹிந்து மரபுகளை பின்பற்றும் பழங்குடியின சகோதரர்களுக்கான வசதிகளை சட்டவிரோதமாக மதம்மாறிய பழங்குடியின மக்கள் இட ஒதுக்கீடுகள் மற்றும் சலுகைகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தேவையான அரசியலமைப்பு திருத்தமும் விரைவில் மேற்கொள்ள வேண்டும், இதன் மூலம் மிஷனரிகளின் சதிகளை முறியடிக்க முடியும்.
- நில ஜிகாத் மற்றும் நிலசிலுவைப்போர் போன்ற தீய சக்திகளுக்கு எதிராக சமூகத்தில் பரந்த பொது விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கவும் மதம் மாறிய மக்களை அவர்களின் பூர்வீக வேர்களுடன் இணைக்கவும் அனைத்து சாது சன்யாசிகள் மற்றும் துறவியர்கள் ஆன்மிகப் பெரியோர்கள் என சமூக கலாச்சார துறைகளில் முன்னணியில் உள்ளவர்களை விசுவ ஹிந்து பரிஷத் கேட்டுக் கொள்கிறது.